டி20 இந்தியாவை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள்… தொடரை கைப்பற்றி அபாரம்…

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி, மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை கைப்பற்றியது.

இந்தியாவும், மேற்கிந்திய தீவுகள் அணியும் 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த‌து.

இதில், இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்த‌து. சூர்யகுமார் யாதவ் 61 ரன்களை குவித்தார். திலக் வர்மா 27 ரன்களை எடுத்தார்.

ஹர்திக் பாண்டியா 14 ரன்களையும், அக்சர் மற்றும் சாம்சன் ஆகியோர் தலா 13 ரன்களையும், சுப்மன் கில் 9 ரன்களையும், அர்ஸ்தீப் சிங் 8 ரன்களையும், ஜெய்ஸ்வால் 5 ரன்களையும், முகேஷ் குமார் 4 ரன்களையும் எடுத்தனர். குல்தீப் யாத்வ் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்ன ஆனார். சாஹல் ரன் எடுக்காமல் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஷெப்பர்ட் 4 விக்கெட்டுகளையும், ஹோசைன் மற்றும் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளையும், ரோஸ்டன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இதையடுத்து 166 ரன்கள் வெற்றி இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தொடங்கியது.

ஓபனிங் பேட்ஸ்மேன் கைல் மேயர் 10 ரன்களில் அவுட் ஆன நிலையில், பிராண்டன் கிங் மற்றும் நிகோலஸ் பூரான் ஆகியோர் ஜோடி சேர்ந்து பந்துகளை சிதரடித்தனர். எனினும் இடையில் மோசமான வானிலை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது.

பின்னர், போட்டி தொடங்கியதும், 47 ரன்களுக்கு பூரான் அவுட்ன ஆனார். பிராண்டன் கிங் 85 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சாய் ஹோப் அதிரடியாக ஆடி 22 ரன்களை குவித்தார்.

இதன் மூலம் 18ஆவது ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து மெற்கிந்திய தீவுகள் அணி 171 ரன்களை எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3க்கு 2 என்ற புள்ளி கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியது.

இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் திலக் வர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர்.