The list of movies actor ajithkumar dropped out but became a block buster hit


தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை தேடி போகாமல் தனக்கு எது பிடிக்குமோ அதை தான் செய்வேன் என மிகவும் தைரியமாக செயல்பட்டு வருபவர் நடிகர் அஜித். பைக் ரேஸிங் கனவை நோக்கிய அவரது பயணத்தில் அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார். தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் அஜித்துக்கு கிடைத்த வாய்ப்புகளும், அவர் தவறவிட்ட சில படங்களும் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம் :
நியூ :
2001ம் ஆண்டில் எஸ்.ஜே. சூர்யா ‘நியூ’ படத்தின் அறிவிப்பு குறித்து வெளியிட்டதும் அதில் ‘வாலி’ மூலம் பிரபலமான அஜித் – ஜோதிகா தான் ஜோடி சேர்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த படம் ட்ராப் செய்யப்பட்டதால் அதன் நியூ வர்ஷன் எஸ்.ஜே. சூர்யா – சிம்ரன் நடிப்பில்  2004ம் ஆண்டு வெளியானது. 
 

மிரட்டல் :
தீனா படத்திற்கு பிறகு 2004ம் ஆண்டு ஏ.ஆர். முருகதாஸ் – அஜித் கூட்டணியில் இரண்டாவது முறையாக கூட்டணி சேர இருந்த திரைப்படம் மிரட்டல். ஆனால் நடிகர் அஜித் வேறு சில படங்களில் நடித்து வந்ததால் மொட்டை போட விரும்பாததால் கடைசி நேரத்தில் அஜித் பின்வாங்கினார். அவருக்கு பதிலாக சூர்யா நடித்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற அப்படம் தான் ‘கஜினி’. 
நான் கடவுள் : 
2003ம் ஆண்டு இயக்குநர் பாலா அஜித்தை வைத்து இயக்க இருந்த திரைப்படம் ‘நான் கடவுள்’. இப்படத்திற்காக அஜித் நீளமான முடியை கூட வளர்த்தார். ஆனால் பல முறை இப்படம் கிடப்பில் போடப்பட்டதால் பொறுமை இழந்த அஜித் அப்படத்தில் இருந்து பின்வாங்கினார். மீண்டும் பாலா அந்த படத்தை நடிகர் ஆர்யாவை வைத்து 2007ம்  ஆண்டு இயக்கி 2009ம் ஆண்டு திரைப்படம் வெளியானது.
நந்தா :
அஜித்தும் இயக்குநர் பாலாவும் முதல் முறையாக கூட்டணி சேர இருந்த திரைப்படம் நந்தா. ஆனால் பாலா ஸ்கிரிப்டை முழுமையாக தயார் செய்யாததால் அதை நிராகரித்தார் அஜித். பின்னர் அப்படம் சூர்யாவின் வசம் சென்றது. 
மஹா :
அஜித் முதல் முறையாக போலீஸ் கேரக்டரில் நடிக்க இருந்த திரைப்படம் மஹா. நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தின் ஸ்டண்ட் காட்சியின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 
 
ஏறுமுகம் :
இயக்குநர் சரண் – அஜித் காம்போவில் 3வது முறையை உருவாக இருந்த இப்படத்தின் ஸ்க்ரிப்ட் அஜித்துக்கு விருப்பம் இல்லாதால் அவர் நிராகரித்தார். அந்த ஸ்க்ரிப்டை சிறு மாற்றங்கள் செய்து விக்ரமை ஹீரோவாக வைத்து ‘ஜெமினி’ என்ற பெயரில் வெளியிட்டார் சரண். 
நேருக்கு நேர் :
அஜித் – விஜய் கூட்டணியில் ‘ராஜாவின் பார்வையிலே’ படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த படம் ‘நேருக்கு நேர்’. இப்படத்தின் படப்பிடிப்பில் 15 நாட்கள் கலந்து கொண்ட அஜித் பின்னர் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட சில பிரச்சினையால் அப்படத்தில் இருந்து விலகினார். பின்னர் அவருக்கு பதிலாக சூர்யாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. 
காக்க காக்க :
காக்க காக்க படத்தில் நடிக்க முதலில் கௌதம் மேனன் முதலில் மாதவன், விக்ரம் மற்றும் அஜித்தை தான் அணுகியுள்ளார். ஆனால் அவர்கள் மறுத்ததால் அப்படத்தில் நடிகர் சூர்யா களம் இறங்கி கலக்கினார். 

மேலும் காண

Source link