Watch Video: | Watch Video:


Watch Video: பெங்களூருவில் பேருந்தில் பயணித்த பெண்ணை, நடத்துனர் ஈவு இரக்கமின்றி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் பயணியை தாக்கி நடத்துனர்:
கர்நாடக மாநிலம் பிலேகல்லி என்ற பகுதியில் இருந்து சிவாஜி நகருக்கு அரசு  பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, அந்த பேருந்தில் மற்றொரு மாநிலத்தைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் பயணம் செய்துக் கொண்டிருந்தார். வேறு மாநிலத்தைச் சேர்ந்த பெண் பயணிக்கும், அங்கிருந்த நடத்துனருக்கு  டிக்கெட் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதத்தில் பெண் பயணியை, நடத்துனர் பலமுறை தாக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் சித்தாப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் நடத்துனரை சஸ்பெண்ட் செய்து பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டது.  நடத்துனர் ஹொன்னப்பா நாகப்பா அகாசர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கையில், “பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் பெண் பயணிகளின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. பேருந்துகளில் பெண்களுக்கு தனி இருக்கை, தனி கதவுகள், பேனிக் பட்டன் அமைத்தல், சிசிடிவி, தகவல் பலகைகள் அமைத்தல், முக்கிய பேருந்து நிலையங்களில் பெண்கள் ஓய்வு அறை, ஹெல்ப்லைன் போன்ற நடவடிக்கைகளை பெங்களூரு மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.

பெங்களூரின் போக்குவரத்து கழகம், பெண்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக,  27,000 பேருந்து ஓட்டுநர், நடனத்துனருக்கு பாலின உணர்திறன் பயிற்சியை வழங்குகிறது.  எங்கள் மாநகராட்சி பெண்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறது. மேலும், பெண் பயணிகளுக்கு எதிராக விரும்பத்தகாத சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
வைரல் வீடியோ:

Slap-Kalesh b/w a Woman and Conductor inside BMTC bus Bengaluru KApic.twitter.com/xBWlAxwsO3
— Ghar Ke Kalesh (@gharkekalesh) March 27, 2024

 
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவீல், ஓடும் பேருந்தில் பெண் பயணியிடம் நடத்துனர் நீண்ட நேரமாக வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். வாக்குவாதம் நீடித்த நிலையில்,  சட்டென பெண் பயணியை கடுமையாக தாக்குகிறார். பெண் பயணி கீழே விழுகிறார். அப்போதும் கூட தொடர்ந்து பெண் பயணியை, நடத்துனர்  கடுமையாக தாக்குவது போன்று வீடியோவில் உள்ளது.  இந்த வீடியோவிற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 
மேலும் படிக்க
 

மேலும் காண

Source link