ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் அபிராமி காணாமல் போன நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, ஆனந்த் வீட்டுக்கு வந்து பிரச்னை செய்து கொண்டிருக்கிற கார்த்திக், அபிராமி காணாமல் போன விஷயத்தை சொல்ல, அண்ணாமலை உடனடியாக போலீஸில் கம்பளைண்ட் கொடுத்து யாருக்கும் தெரியாமல் தேடச் சொல்கிறார். கார்த்திக்கும் போலீசுக்கு தகவல் கொடுத்து தேடச் சொல்ல அவர்களின் வெளியில் தெரியாமல் தேடுவதாக சொல்கின்றனர்.
ரயில்வே ட்ராக் அருகே அடிபட்டு டெட் பாடி ஒன்று கிடக்க, “அங்கே எப்படி இருக்கும்? பணக்கார வீட்டு பொம்பளையா தெரியுது, என்ன கஷ்டம்னு தெரியல இப்படி வந்து சூசைட் பண்ணிக்கிட்டு இருக்காங்க” என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் அங்கு வரும் ஏரியா போலீஸ் இன்ஸ்பெக்டர் “மிஸ்ஸிங் கேஸ் ஏதாச்சு இருக்கா?” என்று கேட்க, “இருக்கு சார், ஆனா அது நம்ம ஏரியா இல்ல” என்று அபிராமி குறித்த விஷயத்தை சொல்கிறார்.
இதையடுத்து சால்வையுடன் அபிராமி வீட்டுக்கு வர, அந்த சால்வையை பார்த்ததும் அண்ணாமலை கதறி அழுகிறார். பிறகு போலீஸ் கார்த்தியை தனியாக அழைத்துச் சென்று ரயில்வே ட்ராக் அருகில் டெட் பாடி இருக்கும் விஷயத்தை சொல்ல கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான்.
பிறகு எல்லோரும் “என்னாச்சு, என்ன விஷயம்? எதுக்கு போலீஸ் தனியா கூட்டிட்டு போய் பேசுறாரு?” என்று ஆனந்த் கேள்வி கேட்டு சத்தம் போட, கார்த்திக் “நான் கொஞ்சம் வெளியே போறேன், போயிட்டு வந்து சொல்றேன்” என சொல்ல, ஆனந்த் இப்பவே சொல்லு என்று சண்டையிட, போலீஸ் டெட் பாடி குறித்த விஷயத்தை உடைக்க, அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். டெட் பாடியை அடையாளம் காண்பதற்காக கார்த்திக்கை அழைத்து செல்வதாக சொல்கின்றனர்.
ஐஸ்வர்யாவும் ராஜேஸ்வரியும் இந்த செய்தியை கேட்டு சந்தோஷப்பட்டு ரூமுக்குச் சென்று “அபிராமி கதை முடிந்தது, சொத்துக்கள நம்ம பேருக்கு மாத்திடற வேலைய பாக்கணும்” என்று ப்ளான் போடுகின்றனர். டெட் பாடியை பார்க்க வந்த கார்த்திக் கண்ணீருடன் காரில் இருந்து கீழே இறங்கி சம்பவ இடத்தை நோக்கி நகர்கிறான். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Siddharth Aditi Rao Marriage: நடிகர் சித்தார்த் – நடிகை அதிதி தெலங்கானாவில் திருமணம்? பரவும் தகவல்!
Santhanam Friends: முதலில் சேது இப்போது சேஷூ… ஒரே நாளில் உயிரிழந்த சந்தானத்தின் 2 நெருங்கிய நண்பர்கள்!
மேலும் காண