Unwanted Test Records England James Anderson Goes Past Anil Kumble Conceding Most Runs By Bowler

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட்:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. 
இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 445 ரன்களை குவித்தது. பின்னர், களமிறங்கிய இங்கிலாந்து அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின் படி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்துள்ளது.
மோசமான சாதனை:
 இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளார். அந்த வகையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளேவின் மோசமான சாதனையைத்தான் அவர் முறியடித்து இருக்கிறார். அதாவது டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். கடந்த 2008 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அனில் கும்ப்ளே இந்திய அணிக்காக 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
இதில் 40 ஆயிரத்து 850 பந்துகள் வீசியுள்ள இவர் 619 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். ஆனால், 18 ஆயிரத்து 355 ரன்களை எதிரணிக்காக விட்டுக்கொடுத்துள்ளார். இச்சூழலில் தான் கும்ப்ளேவின் இந்த மோசமான சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் முறியடித்து இருக்கிறார். அந்த வகையில் 184 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 39 ஆயிரத்து 427 பந்துகள் வீசியுள்ளார்.
696 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் 18 ஆயிரத்து 371 ரன்களை விட்டுக்கொடுத்து இருக்கிறார். அதேநேரம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வார்னே ஆகியோருக்குப் பிறகு டெஸ்ட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் ஜேம்ஸ் ஆண்டர்சன். அதேபோல், 700 விக்கெட்டுகளுக்கு இன்னும் 4 விக்கெட்டுகள் மட்டுமே இவருக்கு தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: 500 Test Wickets: அதிவேக 500 விக்கெட்! முரளிதரனுக்கு அடுத்து நம்ம அஸ்வின்தான் – பட்டியலை பாருங்க!
மேலும் படிக்க: IND vs ENG 3rd Test: அதிரடியாக சதம் விளாசிய பென் டக்கெட்! தடுமாறிய இந்திய பவுலிங்! பேட்டிங்கில் மிரட்டும் இங்கிலாந்து!
 
 

Source link