கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலரை தாண்டியது: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்  - Kumudam

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் கடந்த 28 ம் தேதி ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, யுஏஇ, சவுதி, கத்தார், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளில் ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. 

இதற்கு பதிலடியாக ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன. ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளும் மாறி மாறி ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையே பிப்ரவரி 28ம் தேதி தொடங்கிய போர் 10வது நாளாக நீடிக்கிறது. ஈரானின் 44 போர்க்கப்பல்களை அழித்துள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,300ஆக உயர்ந்துள்ளது.

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்லும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலரை தாண்டியது.

வெள்ளிக்கிழமை கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 92.69 டாலராக இருந்த நிலையில் இன்று 100 டாலரை தாண்டியது. 2022ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானில் பெட்ரோல் ரூ. 321.17: டீசல் ரூ.335.86 

சர்வதேச எண்ணெய் விலை ஒரே வாரத்தில் சுமார் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால் உள்நாட்டு எரிபொருள் விலைகளை திருத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய பெட்ரோல், டீசல் விலைகள் உயர்வால் கடும் பொருளாதார சிக்கலில் உள்ள பாகிஸ்தான், எரிப்பொருள்கள் மீதான விலையை கடுமையாக உயர்த்துவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது.

அதன்படி, வரலாறு காணாத வகையில், ஒரே இரவில் பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.55 உயர்ந்து, பெட்ரோல் ரூ. 321.17-க்கும், டீசல் ரூ.335.86-க்கும் விற்பனையாகிறது. இது வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Полезно знать: оклейка обоев — цена за м? стоимость по подписанным сметам, разброс между дешёвыми и дорогими предложениями и примеры…

  2. Для расчётов: строительные калькуляторы онлайн 56 калькуляторов: бетон, обои, краска, гипсокартон, стяжка, ламинат, кирпич, металл, кровля, фундамент. Считают материалы и…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed