Fans Sent Into Laughter Riot As Scientists Construct Philosopher Chanakya Image That Looks Like Former Indian Captain MS Dhoni CSK | Chanakya


மகதா டிஎஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு இந்திய தத்துவஞானி சாணக்யாவின் உருவத்தை  கற்பனையாக உருவாக்கியுள்ளது என இணையத்தில் ஒரு உருவப்படம் பகிரப்பட்டு வருகின்றது. இந்த உருவம் முன்னாள் இந்திய கேப்டனும் தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்.எஸ். தோனியைப் போலவே உள்ளது. இந்த செய்தி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து ரசிகர்கள் இந்த புகைப்படத்தை நகைச்சுவை கமெண்டுகளுடன் பகிர்ந்து வருகின்றனர். 
சாணக்யா உருவம்:
சாணக்யா ஒரு பண்டைய இந்தியராக அறியப்படுகின்றார்.  அவர் ஒரு ஆசிரியராக, எழுத்தாளராக, மூலோபாயவாதியாக, தத்துவவாதியாக, பொருளாதார நிபுணராக சட்ட வல்லுநராக அறியப்படும் சாணக்யா சந்திரகுப்த மௌரியரின் அரசவையில் அரச ஆலோசகராக பணியாற்றியதன் பிரபலமானவர் என வரலாறுகள் கூறுகின்றது.  கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கு இடையில் எழுதப்பட்ட அரசியல் பற்றிய பிரபலமான புத்தகமான அர்த்தசாஸ்திரம் என்பது இவரது படைப்புகளில் மிகவும் முக்கியமானதாக உள்ளது. 
ரசிகர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் மகேந்திர சிங் தோனியை கிரிக்கெட்டின் ‘சாணக்யா’ என்று அடிக்கடி அழைத்துவருவது வழக்கம். ஏனெனில் சி.எஸ்.கே. கேப்டனின் புத்திசாலித்தனமான மற்றும் நம்பமுடியாத முடிவெடுக்கும் திறன்கள் இந்திய அணிக்கும்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பல வெற்றிகளைப் பெற்றுத்தந்துள்ளது. 

Scientists at Magadha DS University have reconstructed this 3D model of how Chanakya, the author of Arthashastra might have looked. pic.twitter.com/M443FytXCu
— ⛄🎄Jerxn🥑 (@jerxn_) March 10, 2024

இது தொடர்பாக ஒரு ட்வீட் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அதில் பீகாரில் உள்ள மகதா டிஎஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சாணக்யாவின் படங்களை கற்பனையாக உருவாக்கியதாகவும், அந்த உருவம் மகேந்திர சிங் தோனியைப் போலவே இருப்பதாகவும் பலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.  அந்த ட்வீட்டில், “அர்த்தசாஸ்திரத்தின் ஆசிரியரான சாணக்யா எப்படி இருந்திருப்பார் என்பதை மகத டிஎஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த 3டி மாதிரியை புனரமைத்துள்ளனர்.”

மேலும் காண

Source link