தமிழ்நாடு:
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று சென்னை வருகின்றார் பிரதமர் மோடி
தமிழ்நாடு முழுவதும் 56.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: சுகாதாரத்துறை தகவல்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைக்க சீர்காழி சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின்
போலி வீடியோ மிரட்டல் விவகாரத்தை தொடர்ந்து தருமபுரம் ஆதீன மடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு; துப்பாக்கி ஏந்திய 2 போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள்ம் புழங்கல் அதிகரிப்பு; தமிழ்நாடு அரசைக் கண்டித்து அதிமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டம்
மாணவர் சேர்க்கை திரும்ப பெறும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை கல்வி நிறுவனங்கள் திரும்ப வழங்க வேண்டும் என்று யு.ஜி.சி. அறிவுறுத்தல்
தாய், தந்தையை இழந்த மாணவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டத்துக்காக ரூ.5 கோடி ஒதுக்கி அரசாணை
வேற்று கிரகங்களில் வாழ்வதற்கான இடங்கள் குறித்து ஆய்வு – இஸ்ரோ தலைவர் சோம்நாத்
இந்தியா:
பணக்காரர்களை மட்டும் மனதில் வைத்தே ரெயில்வே கொள்கைகள் உள்ளன. ரெயில்வேயின் முன்னுரிமையில் இருந்து ஏழை மற்றும் நடுத்தர வகுப்பினர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் – ராகுல்காந்தி குற்றச்சாட்டு
சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள்-போலீசார் இடையே துப்பாக்கி சண்டை – நீண்ட நேரம் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் போலீஸ்காரர் ஒருவரும், ஒரு நக்சலைட்டைச் சேர்ந்தவர் ஒருவரும் உயிரிழப்பு
மோடி என்பவர் பொய்களுக்கு அதிபதி; மத்திய அரசு திட்டங்களால் யாரும் பயனடையவில்லை – சரமாரியாக விமர்சித்த மல்லிகார்ஜுன கார்கே
மராட்டிய மாநிலத்தில் பாத்திரத்திற்குள் தலையை விட்டு 5 மணி நேரம் சிக்கித் தவித்த சிறுத்தை; மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை மீட்ட வனத்துறை அதிகாரிகள்
பா.ஜ.க.வுக்கு ரூ.2 ஆயிரம் நன்கொடை வழங்கிய பிரதமர் மோடி; நமோ செயலி வழியே ஒவ்வொருவரும் நன்கொடை வழங்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு வலியுறுத்தல்
பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் – அடுத்த 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டம் குறித்து ஆலோசனை
டெல்லியை நோக்கி பேரணி தொடரும்; 10-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம் நடத்துவோம் – விவசாயிகள் அறிவிப்பு
தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் அடுத்த 10 நாட்களில், 12 மாநிலங்களுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம்
பெங்களூரு குண்டுவெடிப்பை வைத்து பா.ஜ.க. அரசியல் செய்கிறது – கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டு
உலகம்:
காசா மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல்: 90 பேர் பலி; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 410ஆக உயர்வு
எரிசக்தி உற்பத்தி தொடர்பாக இந்தியா-இலங்கை இடையே ஒப்பந்தம் கையெழுத்து
பாகிஸ்தானில் 48 மணி நேரத்தில் 37 பேர் பலி – கனமழையால் தத்தளிக்கும் அண்டை நாடு
பாகிஸ்தானில் சமூக ஊடகங்களை நிரந்தரமாக தடை செய்யவேண்டும்.. பாகிஸ்தான் செனட் சபையில் தீர்மானத்தின் மீது இன்று விவாதம்
ஷெபாஸ் ஷெரீப் இரண்டாவது முறையாக பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
விளையாட்டு
மகளிர் பிரீமியர் லீக்; குஜராத் அணியை துவம்சம் செய்த டெல்லி அணி வெற்றி; புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேற்றம்
மகளிர் பிரீமியர் லீக்கில் உ.பி வாரியர்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, வெற்றிப் பாதைக்கு திரும்புமா?
ரஞ்சிக் கோப்பைக் கிரிக்கெட்டில் சதம் விளாசி ஷர்துல் தாக்கூர் அசத்தல்;
Published at : 04 Mar 2024 07:08 AM (IST)
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண