ஐ.பி.எல் 2024 இன் 19 ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் பேட் செய்த பெங்களூரு அணி வீரர்கள், 3 விக்கெட்டுகளை இழப்பிற்கு 183 ரன்களை சேர்த்தனர். அதிகபட்சமாக விராட் கோலி, 72 பந்துகளில் 113 ரன்களை விளாசினார்.பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணியினர், அதிரடியாக விளையாடி வந்தனர். குறிப்பாக பட்லர், 58 பந்துகளில் சதம் விளாசினார்.இதுவரை ஐ.பி.எல்லில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளங்குகிறது.இந்த ஐ.பி.எல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கடந்த மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Published at : 07 Apr 2024 01:16 AM (IST)
ஐபிஎல் ஃபோட்டோ கேலரி
மேலும் காண