here the full box office details for Aranmanai movie series


இயக்குநர் சுந்தர் சி நீண்ட இடைவெளிக்குப் பின் அரண்மனை படத்தின்  4ஆம் பாகத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுந்தர் சி தற்போது நடிகராகவும் கலக்கி வருவதால் படங்கள் இயக்குவது முன்பை விட குறைந்து விட்டது. இருந்தாலும் ஆண்டுக்கு ஒரு படமாவது இயக்கி விட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வரும் அவர் தற்போது அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை எடுத்துள்ளார். 

இந்தப் படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா,கோவை சரளா, யோகி பாபு என பலரும் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா இசை அமைத்துள்ள அரண்மனை 4 படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன் வெளியானது. இந்த படம் மற்ற மூன்று பாகங்களை விட வித்தியாசமாக இருக்கும் என சுந்தர் சி தெரிவித்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படியான நிலையில் சுந்தர் சி இயக்கிய முந்தைய அரண்மனை படத்தின் மூன்று பாகங்களின் வசூல் நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம்.
அரண்மனை:
2014 ஆம் ஆண்டு சுந்தர் சி, ஹன்சிகா,ஆண்ட்ரியா,ராய் லட்சுமி, வினய், சந்தானம்,கோவை சரளா, மனோபாலா, கோட்டா சீனிவாச ராவ், நித்தின் சத்யா, சித்ரா லட்சுமணன்,சரவணன் என பலரும் நடித்து அரண்மனை படம் வெளியானது. பாடல்களுக்கு பரத்வாஜும், பின்னணிக்கு கார்த்திக் ராஜாவும் இசையமைத்திருந்தனர். சுமார் 12 கோடியில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.65 கோடி வசூல் செய்து மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
அரண்மனை 2:
2016 ஆம் ஆண்டு அரண்மனை படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. இதில் சுந்தர் சி,சித்தார்த், ஹன்சிகா, த்ரிஷா, பூனம் பாஜ்வா, சூரி, ராதாரவி, கோவை சரளா, வினோதினி வைத்தியநாதன், சுப்பு பஞ்சு, வைபவ், ஆடுகளம் நரேன், சித்ரா லட்சுமணன் , மனோபாலா, ராஜ்கபூர் என ஏகப்பட்ட பேர் நடித்திருந்தனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றாலும் படம் முந்தைய பாகத்தை விட சுமாரான வெற்றியை பெற்றது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.39 கோடி வசூலித்தது.
அரண்மனை 3:
2021 ஆம் ஆண்டு அரண்மனை 3ஆம் பாகம் வெளியானது. இந்தப் படத்தில் சுந்தர் சி, ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி, கண்ணா, சாக்‌ஷி அகர்வால், மைனா நந்தினி, மனோபாலா, விவேக், யோகி பாபு, கோவை சரளா, நளினி, வேலராமமூர்த்தி என பலரும் நடித்திருந்தனர். 2020 ஆம் ஆண்டு வெளியாக வேண்டிய இப்படம் கொரோனா தொற்று காரணமாக ஓராண்டு தள்ளிப் போய் ரிலீசானது.  இப்ப நம் 25 கோடி மட்டுமே வசூல் செய்தது.

மேலும் காண

Source link