முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சல்யூட்! எம்.பி.க்களின் போராட்டத்திற்கு ஆதரவு.. கேரள முதலமைச்சர் நன்றி

மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் நாளை மறுநாள் போராட்டம்  கேரளாவின் ஆளுங்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்த உள்ளனர். கேரள எம்.பி.க்களின் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவாக இருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மு.க.ஸ்டாலினுக்கு சல்யூட்:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த ஆதரவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, நிலங்களின் செயல்பாடு மற்றும் நிதி சுயாட்சி மீதான மத்திய அரசின் பாகுபாடுகளுக்கு எதிராக பிப்ரவரி 8ம் தேதி டெல்லியில் கேரளா நடத்தும் போராட்டத்திற்கு ஒற்றுமை மற்றும் ஆதரவை வழங்கிய மு.க.ஸ்டாலினுக்கு சல்யூட் என்று பதிவிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின் ஆதரவு:

தி.மு.க. தலைவரும், முதலமைச்சரும் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, தோழர் பினராயி விஜயன் எழுதிய கடிதத்தை, கேரள மாநில தொழிற்துறை ராஜீவ் என்னிடம் அளித்திருந்தார். அதற்கான பதில் கடிதத்தில், மாநில அரசுகளின் நிதி நிருவாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பினை அளிக்கும் என்று உறுதியளித்திருக்கிறேன்.

மேலும், நாளை மறுநாள் (பிப்ரவரி 8) தலைநகர் டெல்லியில் கேரள அமைச்சரவை நடத்தவுள்ள போராட்டத்தில், நாடாளுமன்ற வளாகத்தில் கருஞ்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தும் தி.மு.க.வும் பங்கேற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தெற்கில் நாம், தோழர் பினராயி விஜயன், கிழக்கில் மம்தா பானர்ஜி என இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உறுதியான பற்றுதலைக் கொண்டு பேசும் இன்னும் பிற தலைவர்களுடைய குரல்கள்தான் வேறே தவிர, கொள்கை ஒன்றுதான்! கூட்டுறவுக் கூட்டாட்சியை நிலைநாட்டி, மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் வரை நம் உரிமைக்குரல் ஓயாது! உயிர்த்தீயாய்ச் சுடர்விடும் மாநில சுயாட்சி முழக்கத்தைப் பாசிச பா.ஜ.க.வால் ஒருபோதும் அணைத்துவிட முடியாது. நிதி, நிருவாகம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் மாநிலங்களுடைய உரிமைகள் நிச்சயம் நிலைநாட்டப்படும். அதற்கான காலம் கனிந்துகொண்டு இருக்கிறது!

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க: அரசு பொதுத்தேர்வு, நுழைவுத் தேர்வில் மோசடி செய்தால் 10 ஆண்டு சிறை, ரூ.1 கோடி அபராதம்: வருகிறது புது சட்டம்

மேலும் படிக்க: Indian Embassy Spy : ராணுவம் குறித்து ரகசிய தகவல்களை கசியவிட்ட இந்திய தூதரக அதிகாரி.. பாகிஸ்தான் சதி.. முறியடித்தது எப்படி?

Source link