Taiwan earthquake Visuals buliding collapsed and sea waves rose


தைவான் நாட்டின் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் வீடியோவானது, பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 
தைவான் நிலநடுக்கம்:
இன்று அதிகாலை தைவான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7. 5 எனவும் பதிவானதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தைவானில் சுனாமி எச்சரிக்கையும்  விடுக்கப்பட்டது.
இந்நிலையில், அங்கு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் இடிந்தன.  பொதுமக்கள் அச்சத்துடன் சாலைகளுக்கு செல்வது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியது.
தைவானுக்கு சுனாமி எச்சரிக்கையைத் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, அருகே உள்ள நாடான ஜப்பான் நாட்டின் தெற்கு மாகாணத்தின் கடலோரப் பகுதி மக்களும், அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.  ஜப்பானின் தென்மேற்கு கடற்கரையின் பகுதிகளில் 3 மீட்டர் வரை சுனாமி அலைகள் அடையும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்தது.
வைரலாகும் வீடியோ:
தைவான் நிலநடுக்கம் தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி முகமையில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் மிகப்பெரிய கட்டடங்கள் இடிந்து உள்ளதை பார்க்க முடிகிறது. மேலும், கட்டிடங்கள் சரிந்து விழுந்து பல வாகனங்களையும் சேதமாக்கியுள்ளதை பார்க்க முடிகிறது.

#WATCH | A very shallow earthquake with a preliminary magnitude of 7.5 struck in the ocean near Taiwan. Japan has issued an evacuation advisory for the coastal areas of the southern prefecture of Okinawa after the earthquake triggered a tsunami warning. Tsunami waves of up to 3… pic.twitter.com/2Q1gd0lBaD
— ANI (@ANI) April 3, 2024

மற்றொரு வீடியோவில், சிடிசி என்னும் செய்தி நிறுவனத்தில், செய்தியாளர் வாசித்து கொண்டிருக்கும்போதே, அங்கிருக்கும் தொலைக்காட்சிகள், மின் விளக்குகள் மிகப்பெரிய அசைவுக்கு உள்ளாவதை பார்க்க முடிகிறது.

Video shows moments Taiwan hit by powerful earthquake#taiwan #earthquake #tsunamiSource: CTV News pic.twitter.com/92XpdXXOBE
— Pranjal Vyas (@pranjaIvyas) April 3, 2024


Now again 🚨 – TAIWAN – Earthquake Taiwan in the swimming pool #Taiwan #Earthquake #Tsunami #TaiwanEarthquake #China #ishigaki #Hualien #Japan #Terremoto #OKINAWA #landslide pic.twitter.com/WRbz145Lmq
— Sandeep Khasa (@SamKhasa_) April 3, 2024

மற்றொரு வீடியோவில், நீச்சல் குளத்தில் ஒருவர் இருக்கும் வீடியோவில், நீரானது பல அடிக்கு எழுந்து வருவதை பார்க்க முடிகிறது.
இந்த நிலநடுக்கத்தால் மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்தான தகவல் வெளியாகவில்லை.  கடந்த 25 ஆண்டுகளில் தைவானில்  ஏற்பட்ட மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது என ஏ.எஃப்.பி செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

Source link