Chance Of Rain In A Couple Of Places In Tamil Nadu And Puducherry Today Freeze Warning Weather Report | Rain Alert: தமிழகம், புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு ..உறைபனி எச்சரிக்கை

இன்று வெளியாகி உள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
”கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
21.01.2024: தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது.  தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
22.01.2024: தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
23.01.2024 முதல்  27.01.2024 வரை: தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 
உறைபனி எச்சரிக்கை:
21.01.2024 மற்றும் 22.01.2024: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 
கடந்த 24 மணிநேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  
காயல்பட்டினம் (தூத்துக்குடி) 2, மணிமுத்தாறு (திருநெல்வேலி), சாத்தான்குளம்  (தூத்துக்குடி), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), ஊத்து (திருநெல்வேலி), நாங்குனேரி (திருநெல்வேலி), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), களக்காடு (திருநெல்வேலி), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), சிட்டம்பட்டி (மதுரை), நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:  ஏதுமில்லை”. இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அடுத்த 3 மணிநேரம்
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்  வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
மேலும் படிக்க 
Afghanistan plane Crash: ஆப்கானிஸ்தானில் விபத்தில் சிக்கியது இந்திய விமானம் அல்ல – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Ram Halwa: அயோத்தி பக்தர்களுக்காக 7 ஆயிரம் கிலோ அல்வா.. சிறப்புகள் என்ன தெரியுமா?
Nirmala Sitharaman: ராமர் பூஜைக்கு தடை? தமிழக அரசின் இந்து விரோத, வெறுக்கத்தக்க செயல் – நிர்மலா சீதாராமன் கண்டனம்

Source link