IPL 2024: ஐபிஎல் 17வது சீசனையும் மிஸ் செய்யப் போகிறாரா விராட் கோலி..? அப்போ! டி20 உலகக் கோப்பை..!

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமீபத்தில் இரண்டாவது முறையாக தந்தையானார். விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஜோடிக்கு கடந்த பிப்ரவரி 15ம் தேதி ஆண் குழந்தை பிறந்ததாக சில நாட்களுக்கு முன்பு விராட் கோலி சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, தங்களுக்கு இரண்டாவதாக பிறந்த ஆண் குழந்தைக்கு ஆகாய் என்று பெயர் வைத்துள்ளார். இதன் காரணமாக விராட் கோலி சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்தநிலையில், நேற்று இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதற்கு பிறகு சமூக வலைதளத்தில் வாழ்த்துகளை தெரிவித்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான முழு டெஸ்ட் தொடரில் இருந்து, விராட் கோலி விலகிய நிலையில் வருகின்ற மார்ச் மாதம் தொடங்கும் ஐபிஎல்லில் இருந்தும் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2024 மூலம் விராட் கோலி களம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விராட் கோலி, தனிப்பட்ட காரணத்திற்காக விலகி இருக்கிறார். விராட் கோலி தற்போது லண்டனில் தன்னுடைய குடும்பத்தூருடன் தங்கி இருப்பதாகவும், நெர் பிராக்டீஸிலிருந்தும் விலகி இருக்கிறார். இதையடுத்து, கோலி ஐபிஎல் விளையாடுவது குறித்து எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த சுனில் கவாஸ்கர், “ அவர் ஐபிஎல்லில் விளையாடுவாரா? ஒருவேளை அவர் ஐபிஎல் விளையாடாமல் இருக்கலாம்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்:

இங்கிலாந்துக்கு எதிரான தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பெயரை வாபஸ் பெற்றார். என்ன காரணம், எதற்காக விலகினார் என்ற கேள்வி எழுந்தபோது ராஞ்சி டெஸ்ட் தொடங்கும் முன், தொடரில் இருந்து தனது பெயரை விலக்கியதற்கான காரணத்தை விளக்கிய விராட் கோலி, தங்களுக்கு இரண்டாவது முறையாக குழந்தை பிறந்ததாக அறிவித்தார்.

குழந்தை பிறந்து ஒரு சில வாரங்கள் ஆகியும் விராட் கோலி இன்னும் இந்தியா திரும்பவில்லை. இதே சூழ்நிலை நீடித்தால் ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகம். ஐபிஎல் தொடரில் விராட் கோலி விளையாடாத பட்சத்தில், இந்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. எவ்வாறாயிலும், விராட் கோலி போன்ற ஒரு வீரர் எந்த சூழ்நிலையிலும் உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டியை இழக்க விரும்ப மாட்டார் என்பதால் இதற்கான சாத்தியம் மிகவும் குறைவே என்று கூறப்படுகிறது.

ஐபிஎல் 2024:

இந்தியன் பிரீமியர் லீக் 2024க்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. போட்டியின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதற்கு காரணம் விராட் கோலிதான் என்பதில் சந்தேகமில்லை. கடந்த 16 வருடங்களில் ஆர்சிபிக்காக அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

விராட் கோலி 2011 முதல் 2021 வரை 143 ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கேப்டனாக இருந்தார். இதில், இவரது தலைமையில் ஆர்சிபி அணி 66 போட்டிகளில் வெற்றியும், 70 போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது. 3 போட்டிகள் டையில் முடிந்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் மிக வெற்றிகரமான பேட்ஸ்மேன் விராட்.

Source link