top news India today abp nadu morning top India news March 6 2024 know full details


தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மக்கள சென்றடைவதை உறுதி செய்ய,  நீங்கள் நலமா திட்டம் தொடங்கப்படுகிறது. அண்மையில் மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசுகையில், “அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில் ‘நீங்கள் நலமா?’ என்ற திட்டம் மார்ச் 6ம் தேதி தொடங்கப்படும்” என அறிவித்தார். இந்த திட்டத்தின் மூலம், முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் போன்ற அனைத்து அரசு அதிகாரிகளும் தமிழ்நாடு மேலும் படிக்க..
விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து டெல்லி எல்லை, ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துதல், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் 2021ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். இவற்றை நிறைவேற்றக் கோரி, கடந்த மாதம் 13ம் தேதி விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். ஆனால், ஹரியானா மற்றும் டெல்லி எல்லையில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். கண்ணீர் புகை குண்டுகளை கொண்டும் தாக்கப்பட்டனர். இதில் ஒரு விவசாயி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து டெல்லியை முற்றுகையிடும் போராட்டாம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் படிக்க..

நெருங்கும் தேர்தல் – அடம்பிடிக்கும் விசிக – 3 தொகுதிகளை கொடுக்குமா திமுக? இன்று 2ம்கட்ட பேச்சுவார்த்தை

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்களவை தொகுதியில் தங்களுக்கு 3 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அடுத்த சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்கான பணிகளை கடந்த ஆண்டின் இறுதியிலிருந்தே அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. கூட்டணி, தொகுதிப்பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என்பது போன்ற பணிகள் பல்வேறு கட்சிகளிலும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் படிக்க..

இன்று தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் விழா.. யார் யாருக்கு விருதுகள்..? முழு பட்டியல் இதோ!

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் விழா இன்று நடைபெறுகிறது. இன்று சென்னையில் நடைபெறும் 2015ம் ஆண்டுக்கான தேர்வு செய்யப்பட்ட சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விருது விழாவில் திரைப்பட விருதுகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்குகிறார். இந்த விழாவில் மொத்தம் 39 விருதாளர்களுக்கு காசோலை, தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.  அதன்படி 2015ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது ‘இறுதிச்சுற்று’ படத்துக்காக ஆர்.மாதவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2015ம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களாக தனி ஒருவன், பசங்க 2, பிரபா, இறுதிச்சுற்று, 36 வயதினிலே தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க..

Source link