7 Am Headlines today 2024 april 3rd headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு:

தேர்தல் சீசனுக்கு மட்டும் தமிழ்நாட்டுக்கு வருகிறார் பிரதமர்; சீனா, இந்தியாவை எதிர்க்க துணிச்சல் இல்லை- கச்சத்தீவை பற்றி மோடி பேசலாமா? நாடகம் போடுவதும் இன்னும் சில நாட்களுக்குத்தான் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
நாம் போடும் ஓட்டுதான் மோடிக்கு போடும் வேட்டு; மத்திய சென்னை பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அரசுப் பள்ளிகளில் 2024-25 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை 3 லட்சத்தை கடந்தது – பள்ளிக்கல்வித்துறை தகவல்
கூட்டாட்சி என கூறும் மோடி காட்டாச்சி நடத்துகிறார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்.
அரசியல் ஆதாயத்துக்காக கச்சத்தீவு விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது – எடப்பாடி பழனிசாமி.
ஊழல் செய்யவே தேர்தல் பத்திரங்களை பாஜக கொண்டு வந்தது – கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு.
கச்சத்தீவு பற்றி உண்மைக்கு புறம்பாக பாஜக தலைவர் பேசுகின்றனர் – ப.சிதம்பரம்.
போதைப்பொருள் வழக்கில் இயக்குநர் அமீரிடம் 11 மணிநேரம் நடத்திய விசாரணை நிறைவு.
கொள்கை, கூட்டணி என்று எதுவும் பாமகவுக்கு கிடையாது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றம் இன்று வழக்கு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அடுத்த 5 நாட்களுக்கு 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் – வானிலை ஆய்வு மையம். 

இந்தியா: 

ஆந்திராவில் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவித்தது காங்கிரஸ் கட்சி.
திகார் சிறையில் கெஜ்ரிவால் அறைக்கும் அருகே அடுத்தடுத்து தாதாக்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
மாநிலங்களவை எம்.பியாக உள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.
வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
காஷ்மீர்: அனந்த்நாக் – ரஜோரி தொகுதியில் முன்னாள் அமைச்சர் குலாம்நபி ஆசாத் போட்டி.
திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹூவா மொய்த்ரா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு.
பாஜகவில் சேருமாறு தன்னை மிரட்டியதாக டெல்லி அமைச்சர் அதிஷி பரபரப்பு குற்றச்சாட்டு.
ரயில் நிலையங்களில் யு.பி.ஐ மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்தது ரயில்வே
ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் உட்பட 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு. 

உலகம்: 

மனைவிக்கு விஷம் வைத்து கொல்ல முயற்சிப்பதாக இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டு.
கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கம்.
துருக்கி: இஸ்தான்புல் நகரில் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 பேர் உயிரிழப்பு.
சிரியாவில் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் உயிரிழப்பு.
இஸ்ரேல் தாக்குதலில் 7 ஐநா ஊழியர்கள் கொல்லப்பட்டது தற்செயலானது – நெதன்யாகு.
தமிழ்நாட்டை பின்பற்றி கனடா நாட்டிலும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் அறிமுகம்.
பின்லாந்து நாட்டில் 12 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குழந்தை உயிரிழப்பு.
காசாவில் இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் ஐநா ஊழியர்கள் 7 பேர் உயிரிழப்பு. 

விளையாட்டு: 

செஸ்: பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளராக ரஷ்ய சாம்பியன் பீட்டர் ஸ்விட்லர் நியமனம்.
ஐபிஎல் 2024: கொல்கத்தா – டெல்லி இன்று மோதல்.
ஐபிஎல் 2024: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றது லக்னோ அணி.
5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இந்திய ஆக்கி அணி ஆஸ்திரேலியா பயணம்

Published at : 03 Apr 2024 07:23 AM (IST)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

Source link