திருவண்ணாமலை குற்ற பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரைக்கு மத்திய அரசின் விருது

தனிச்சிறப்புடன் பணியாற்றும் போலீசாருக்கு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் என ஆண்டுக்கு இருமுறை விருதுகள் வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக காவல் துறையை சேர்ந்த 24 பேருக்கு குடியரசுத தலைவரின் தகைசால் மற்றும் மெச்சத தகுந்த பணிக்கான விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம், மாவட்ட குற்ற பிரிவு-II  துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரைக்கு மெச்சத தகுந்த பணிக்கான விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இவர் 01.03.1996-ல் நேரடி உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து 03.11.2005- ல் காவல் ஆய்வாளராகவும், 06.04.2017-ல் துணை காவல் கண்காணிப்பாளராகவும் பதவி உயர்வு பெற்றார். இவர் தனது பணிக்காலத்தில் 17 பண வெகுமதியும், 42 நற்பணிப்பதிவு, 2 மெச்சத்தகுந்த பணிப்பதிவு, 2012-ம் ஆண்டிற்கான தமிழக முதல்வரின் சிறந்த புலனாய்விற்கான விருதையும் மற்றும்
2021-ம் ஆண்டிற்கான அண்ணா பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

தனது பணிக்காலத்தில் 17 பண வெகுமதியும், 42 நற்பணிப்பதிவு, 2 மெச்சத்தகுந்த பணிப்பதிவு 2012-ம் ஆண்டிற்கான தமிழக முதல்வரின் சிறந்த புலனாய்விற்கான விருதையும் மற்றும் 2021-ம் ஆண்டிற்கான அண்ணா பதக்கத்தையும் பெற் றுள்ளார். இவர் வேலுர் மாவட்ட குற்றப்பிரிவு-குற்றப்புலனாய்வு துறையில் பணிபுரிந்தபோது வேலூர் மாவட்டத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய வேலூர் மாவட்ட இந்து முன்னனி தலைவர் வெள்ளையன் என்பவரின் கொலை வழக்கில் சிறப்பாக புலன் விசாரனை செய்து குற்றவாளியை கைது செய்துள்ளார். கடலாடி பகுதியில் உள்ள வெற்றிவேல் நகைக்கடையில் 1445 கிராம் தங்க நகைகள் மற்றும் 24.5 கிலோ கிராம் எடையுள்ள வெள்ளி நகைகளை திருடிய நபர்களை கொள்ளை சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் கைது செய்தும் கொள்ளைபோன அனைத்து பொருட்களும்
மீட்கப்பட்டு எதிரிகளை சிறையில் அடைத்து சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பான வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவில் உறுப்பினராக இருந்து அக்கலவர வழக்கின் புலன்விசாரணையை முடித்து குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பியுள்ளார். இவருக்கு கீழ்பணிபுரியும் சார்நிலை பணியார்களை கட்டுக்கோப்புடன் வழிநடத்துவதுடன் தனது உயர் அதிகாரிகளுக்கு உண்மையுடனும்  கீழ்பணிந்தும் நடந்துகொள்வார். இவரது 27 ஆண்டுகால பணிக்காலத்தில் பல கொலை வழக்குகள் மற்றும் களவு வழக்குகளின் எதிரிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பியுள்ளதுடன் களவுபோன சொத்துகளை மீட்டும் மிகுந்த தொல்லை தரும் எதிரிகளை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளார். இவர் தனது பணிக்காலம் முழுவதிலும் திறமையாகவும், நேர்மையாகவும், வல்லமையுடனும், அற்பணிப்புனர்வுடன்  தனது பணியினை உயர்ந்த அளவில் செய்து முடிப்பவர். ஏனவே இவரின் நடத்தை மற்றும் குணநலன்களை போற்றும் வகையில் மத்திய அரசு இந்தாண்டிற்கான குடியரசு தலைவரின் மெச்சத்தகுந்த பணிக்கான விருதை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து காவல் துணை கண்காணிப்பாளர் பதவியில் இவர் ஒருவருக்கு மட்டும்தான் மத்திய அரசின் மெச்சத்தகுந்த பணிக்கான விருது இந்தாண்டு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link