கரூர் ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய சித்திரை திருவிழா; பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன்

கரூர் ராயனூர் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் அக்னிச்சட்டி உள்ளிட்ட நேர்த்திக் கடனை செய்தனர்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவில் முன்னிட்டு ஏராளமான பெண் பக்தர்கள் சுவாமி ஆலய கிணற்றிலிருந்து அக்னி சட்டி, பால்குடம், தீர்த்தக்குடம் உள்ளிட்ட நேர்த்திக்கடனை செய்தனர். நிகழ்ச்சியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வண்ண சீருடை அணிந்து சுவாமி கிணற்றிற்கு வந்து அடைந்த பிறகு அங்கு ஏராளமான அக்னிச்சட்டி, பால்குடம், தீர்த்த குடம் எடுக்கும் பக்தர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

அதைத் தொடர்ந்து தாரை தப்பட்டைகள் முழங்க வானவேடிக்கையுடன் சுவாமி கிணற்றிலிருந்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி ஆலயம் வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் வந்தடைந்தனர். அதை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இராயனூர் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சித்திரை மாத திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செய்தது மிகவும் குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சி ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.

கரூர் ராயனூர் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு சாமி கரகம் கோவில் வரும் நிகழ்வு.

சித்திரை மாதத்தில் பல்வேறு உள்ளூர் தெய்வங்களின் சிறப்பு திருவிழா பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் ராயனூர் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு சுவாமி கரகம், பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயத்தில் இருந்து பூசாரி மற்றும் ஊர் பொதுமக்கள் சுவாமி கிணற்றுக்கு சென்ற பிறகு அங்கு சுவாமி கரகம் பாலிக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வான வேடிக்கை முழங்க தாரதப்பட்டைகளுடன் கோவில் பூசாரி அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கரகத்தை தலையில் சுமந்தவாறு ஆலயம் வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தது.

அதை தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த தேங்காய் பழம் பிரசாத வழிபாடு நடைபெற்ற பிறகு சித்திரை மாத திருவிழா சிறப்பாக துவங்கியது. தொடர்ந்து மூன்று நாள் திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

Source link