PM Modi: அபுதாபியில் முதல் இந்துக்கோயல்; ரூ.700 கோடி செலவில் கட்டப்பட்ட பிரமாண்டம்: திறந்து வைத்த பிரதமர் மோடி


அபுதாபியின் முதல் இந்து கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.  மத்திய கிழக்கு நாடுகளில் இந்த கோவில் மிகப்பெரிய கோவிலாக உள்ளது. இங்கு கோவில் கட்ட கடந்த 2015ஆம் ஆண்டு ஐக்கிய அமீரக நாடு நிலம் வழங்குவதாக அறிவித்தது. அதன் பின்னர் 2019ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கியது. 
27 ஏக்கரில் பரந்து விரிந்து ரூபாய் 700 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த BAPS கோயில், இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையே உள்ள ஆழமான உறவின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த கோவிலில் மொத்தம் 7 கோபுரங்கள் உள்ளன. இந்த கோபுரங்களில் ராமர், சிவன், ஜகன்னாதர், கிருஷ்ணர், சுவாமிநாராயண் (கிருஷ்ணரின் மறு அவதாரமாகக் கருதப்படுகிறது), திருப்பதி பாலாஜி மற்றும் ஐயப்பா உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகள் உள்ளன. ஏழு ஷிகர்களும் அதாவது கோபுரங்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஏழு எமிரேட்களைக் குறிக்கின்றன.” BAPS இன் தலைவர் பிரம்மவிஹாரிதாஸ் ஊடகங்களிடம் தெரிவித்தார். 

மேலும் காண

Source link