7 Am Headlines today 2024 March 30th headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு:

தேர்தலில் போட்டியிட்டால் நிர்மலா சீதாராமனுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
டெல்லியில் பாஜக பெரிய கட்சியாக இருக்கலாம்; தமிழகத்தில் பாஜக சின்ன கட்சிதான் – அதிமுக.
மோடி அரசின் ஜிஎஸ்டி வரியால் சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது – பிரேமலதா.
சென்னையில் தேர்தல் பணிக்கு வராத 1, 500 அரசு ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்.
நிதிப் பகிர்வில் மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு.
4-9 வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல், சமூக அறிவியல் தேர்வு தேதி மாற்றம் – பள்ளிக்கல்வித்துறை.
மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு.
தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொள்வதாக அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு.
தேர்தலில் நிற்காமல் நான் தியாகம் செய்யவில்லை; வியூகம் செய்துள்ளேன் – கமல்ஹாசன். 
தமிழில் பிரபல வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார்.
 சமூக நீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்?- முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி
நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கிய மைக் சின்னத்தை ஆபாசமாக வடிவமைத்து சமூகவலைதளங்களில் பரப்பியதாக திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு.
தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கும் அமமுகவிற்கும் என்ன தகுதி உள்ளது என காட்டமாக அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார். 

இந்தியா: 

டெல்லி ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த இந்தியா கூட்டணிக்கு காவல்துறையினர் அனுமதி.
5 நிதி ஆண்டுகளில் ரூ. 1, 823 கோடி காங்கிரஸ் கட்சி வரி செலுத்தவில்லை எனக்கூறி ஐடி நோட்டீஸ்.
இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் வரி செலுத்தவில்லை என்றும் வருமானவரித்துறை நோட்டீஸ்.
அதானி மின் உற்பத்தி நிறுவனத்தில் 26% பங்குகளை வாங்குகிறார் தொழிலதிபர் முகேஷ் அம்பானி.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்.
பீகாரில் இந்தியா கூட்டணி தொகுதி உடன்பாடு – 40ல் ஆர்.ஜேடி., காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டி.
முன்னாள் அமைச்சர் பிரபுல் படேலுக்கு எதிரான ரூ.850 கோடி முறைகேடு வழக்கு முடித்து வைப்பு.
இந்தியாவில் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் பாதுக்காக்கப்பட வேண்டும் – ஐநா சபை.
ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து – 10 பேர் உயிரிழப்பு.
பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரின் புகைப்படம் வெளியீடு

உலகம்: 

 தென்னாப்பிரிக்கா: மலைப்பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்து தீப்பிடித்ததில் 45 பயணிகள் உயிரிழப்பு.
நோட்டோ கூட்டமைப்பு நாடுகளில் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை – அதிபர் புதின்
இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்சனை தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை நிறைவு.
ரஷ்ய கேளிக்கை அரங்கில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக தஜிகிஸ்தானில் 9 பேர் உயிரிழப்பு
காஸாவில் போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தையை தொடங்க தயார் – இஸ்ரேல் பிரதமர்

விளையாட்டு: 

ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் இன்று பலப்பரீட்சை.
ஐபிஎல் 2024: பெங்களூருவை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா.
விராட் கோலி பெங்களூரு அணிக்காக அதிக சிக்ஸர்கள் (241) அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். 

 
 
 

Published at : 30 Mar 2024 07:03 AM (IST)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

Source link