TVK: "விஜய்க்கு இன்னும் நிறைய சவால்கள் வரப்போகுகின்றன" - செளந்தர்யா ரஜினிகாந்த் | Soundarya Rajinikanth says TVK: "Vijay has many more challenges ahead" -

நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான சௌந்தர்யா மற்றும் தயாரிப்பாளர் மகேஷ் உள்ளிட்டோர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால்கள் மற்றும் உபகரணங்கள், ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு நல உதவிகள் வழங்கினர்.

அதன் பின்பு சௌந்தர்யா ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இன்னைக்கு 27 பேருக்கு செயற்கை கால்கள் வழங்கியுள்ளோம். ஐந்து மகளிருக்கு ஆட்டோக்களும் நாங்க கொடுத்திருக்கோம். அது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நிறைய மக்களுக்கு நல்லது செய்யணும்னு எப்பவுமே நினைச்சிருக்கோம். அப்பாவும் நிறைய செஞ்சிட்டு இருக்காரு.

நான் கன்னியாகுமரியிலிருந்து இதை ஆரம்பிக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஏன்னா, நான் ரொம்ப ரொம்ப நம்புற, ஒரு பெரிய ஆளுமை பகவதி அம்மன். இங்கிருந்து ஸ்டார்ட் பண்றது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ​இது முதல் முயற்சிதான். இங்கிருந்து இன்னும் நிறைய மக்களுக்கு நாங்க நல்லது செய்வோம்.

இங்க நேரா வந்து ஒருத்தொருத்தர் முகத்தைப் பார்த்து, என் கையால அவங்களுக்கு செயற்கை கால்கள் கொடுக்கிறதை மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். இது ஒரு தொடக்கம்தான் இன்னும் நிறைய செய்வோம்” என்றார்.

பெண் இருவருக்கு ஆட்டோ வழங்கிய செளந்தர்யா ரஜினிகாந்த்

பெண் இருவருக்கு ஆட்டோ வழங்கிய செளந்தர்யா ரஜினிகாந்த்

இந்தத் தொண்டு நிறுவனப் பணிகளை அடுத்தடுத்து எந்தெந்த மாவட்டங்களுக்குக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளீர்கள் எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இங்கிருந்து இப்போது தொடங்கி உள்ளோம். இதன் பிறகு கண்டிப்பாக இந்த முயற்சியைத் தொடரணும்னு பார்க்கிறேன்” என்றவரிடம், இந்த மக்கள் நலத்திட்டங்கள் மூலம் நீங்கள் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் ஏதேனும் உள்ளதா எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “​மக்களுக்கு நல்லது செய்யணும்னு வந்திருக்கோம். நல்லது எப்படி வேணுமானாலும் செய்யலாம்.

Source link


Leave a Reply

Latest News

View All

  1. Информация об обращении не передается третьим лицам, а детали лечения обсуждаются только с пациентом. Изучить вопрос подробнее – [url=https://1kapelnica-ot-zapoya-v-moskve77.ru/]kapelnica-ot-alkogolya-posle-zapoya[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed