Nora Fatehi reveals most Bollywood couples are not in love claims they marry for money fame and clout


பாலிவுட் நடிகர், நடிகைகள் பணம், புகழுக்காக சினிமாவுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்கிறார்கள் என நடிகை நோரா ஃபதேஹி (Nora Fatehi) சாடியுள்ளார். 
பாகுபலி பட நடிகை

தன் கலக்கல் நடனத்தால் இந்திய சினிமா ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் நடிகை நோரா ஃபதேஹி. கனடாவில் பிறந்து தனக்கு இந்திய சினிமா மற்றும் நடிப்பின் மீது இருந்த ஆர்வ்த்தால் இந்தியா வந்து கடந்த 10 ஆண்டுகளில் பிரபல நடிகையாக தன்னை நிறுவிக் கொண்டவர் . 
கடந்த 2014ஆம் ஆண்டு ‘ரோர் – டைகர்ஸ் ஆஃப் சுந்தர்பன்ஸ்’ என்ற இந்தி படத்தின் மூலம் அறிமுகமான நோரா ஃபதேஹி, தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நோரா ஃபதேஹிக்கு முதலில் இந்தி பிக்பாஸ் சீசன் 9 தான் லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுத் தந்தது.
பாலிவுட் நட்சத்திரத் தம்பதிகள் மீது அட்டாக்!
தொடர்ந்து பாகுபலி படத்தில் உருக்கியோ எனும் பாடலில் நடனமாடி ரசிகர்களை ஈர்த்த நோரா ஃபதேஹி, அதன் பின் தன் நடனத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பாடல்களில் நடனமாடி ரசிகர்களைப் பெற்றார்.  தற்போது பாலிவுட்டில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ள நோரா ஃபதேஹி, பாலிவுட் நடிகர், நடிகைகள் பற்றி சொல்லியுள்ள கருத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 
செல்வாக்குக்காக திருமணம்
பாலிவுட் நடிகர், நடிகையரின் திருமணம் பற்றி நோரா பேசுகையில், “இந்த பிரபல வேட்டையாடுபவர்கள், உங்கள் புகழுக்காக உங்களைப் பயன்படுத்த விரும்புகிறார்கள். ஆனால் இவர்களால் என்னுடன் இருக்க முடியாது. அதனால்தான் நான் ஆண்களுடன் டேட்டிங் செல்வதை நீங்கள் பார்ப்பதில்லை. ஆனால் எனக்கு முன்னால் இவையெல்லாம் நடக்கின்றன. இந்தத் திரையுலகில் தங்கள் செல்வாக்குக்காக நடிகர், நடிகைகள் திருமணம் செய்து கொள்கிறார்கள். தங்கள் கணவர்கள், மனைவிகளின் நெட்வொர்க்கிங் மற்றும் வட்டங்களுக்காக, பணத்திற்காக பயன்படுத்துகிறார்கள். 
”நான் அந்த நபரை திருமணம் செய்து கொள்ள வேண்டும், அதனால் நான் அடுத்த மூன்று வருடங்கள் ஆக்டிவ்வாக முடியும், நானும் அந்த அலையில் சவாரி செய்ய வேண்டும்” என்று அவர்கள் நினைக்கிறார்கள். அந்தளவுக்கு இவர்கள் கணக்கிடக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் வேட்டையாடிகளும் கூட” என்று நோரா பாட்காஸ்ட் (podcast) ஒன்றில் தெரிவித்துள்ளார்.
‘இவங்க வாழ்க்கை என்ன ஆகும்?’

மேலும், “இவை அனைத்தும் பணம் மற்றும் புகழின் தேவையிலிருந்து வெளிவருகிறது. இந்த ஆண்களும் பெண்களும் பணம், புகழ் மற்றும் அதிகாரத்திற்காக தங்கள் முழு வாழ்க்கையையும் அழித்துக் கொள்கிறார்கள். நீங்கள் காதலிக்காத ஒருவரைத் திருமணம் செய்து, பிறகு அவர்களுடன் பல ஆண்டுகள் வாழ்வதை விட மோசமானது எதுவுமில்லை.
எங்கள் துறையில் உள்ள பெரும்பாலான மக்கள் இங்கே அந்த முட்டாள்தனத்தை செய்கிறார்கள். அவர்கள் சரியான நபர்களுடன் தொடர்பில் இருக்க விரும்பி இப்படி செய்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை எங்கு செல்லப் போகிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை, மன ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை தியாகம் செய்வது பற்றி எனக்குப் புரியவில்லை, ஏனென்றால் வேலை வேறு, வீட்டு வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என்பது வேறு. நீங்கள் இரண்டையும் கலக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டீர்கள். இதனால் மனச்சோர்வு,  தற்கொலை எண்ணங்கள்கூட உங்களுக்கு ஏற்படும்” எனக் கூறியுள்ளார்.
60கள் தொடங்கி தற்போது வரை ரன்பீர் – அலியா, ரன்வீர் சிங் – தீபிகா படுகோன், சித்தார்த் – கியாரா அத்வானி, விக்கி கௌஷல் – கத்ரீனா என பல நட்சத்தித் தம்பதிகள் பாலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இவர்களை மறைமுகமாகத் தாக்கும் வகையில் நோரா தெரிவித்துள்ள இந்தக் கருத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

மேலும் காண

Source link