Babri Masjid: ராஜ் தாக்கரேவுக்கு பரிசாக அளிக்கப்பட்ட மசூதியின் செங்கல்.. நவநிர்மாண் சேனா தலைவர் செயலின் பின்னணி என்ன?


<p>மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா தலைவர் பாலா நந்தகோன்கர், அயோத்தியில் பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு கொண்டு வந்த செங்கலை ராஜ் தாக்கரேவுக்குப் பரிசாக அளித்துள்ளார். எம்என்எஸ் தலைவர் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் சித்தாந்தத்தின் வாரிசு என்று கூறி ராஜ் தாக்கரேவுக்குப் இதனை பரிசளித்துள்ளார். 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதி 1992ல் ‘கர சேவகர்களால்’ இடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p>
<p><iframe style="border: none; overflow: hidden;" src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FMeBalaNandgaonkar%2Fposts%2F978037563679367&amp;show_text=true&amp;width=500" width="500" height="250" frameborder="0" scrolling="no" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>இந்த கட்டிடத்தை இடிப்பதில் தனது சைனியர்கள் யாரேனும் பங்கு பெற்றிருந்தால் நான் பெருமைப்படுவதாக பால் தாக்கரே அடிக்கடி மேற்கோள் காட்டியுள்ளார்.&nbsp; இந்நிலையில், 32 ஆண்டுகளாக அந்த செங்கலை தன்னுடன் வைத்திருந்ததாக பாலா நந்தகோன்கர் தெரிவித்துள்ளார். &nbsp;இது தொடர்பாக பேசிய நந்தகோன்கர், &ldquo;பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, அங்கிருந்து இரண்டு செங்கலை கொண்டு வந்தேன். இவற்றை என் வீட்டில் வைத்திருந்தேன். அந்தச் செங்கலை பாலசாகேப்பிற்கு நினைவுப் பரிசாகப் பரிசளிக்க விரும்புகிறேன். ஆனால் அவர் தற்போது உயிருடன் இல்லை. பால சாகேப் வடிவில் நான் ராஜ் சாகேபை பார்க்கிறேன். இதனால் தான் நான் அந்த செங்கலை ராஜ் தாக்கரேவுக்கு பரிசாக அளித்துள்ளேன்&rdquo; என தெரிவித்துள்ளார்.</p>
<p>மேலும், &ldquo;இதனால், பாலாசாகேப்பின் சிந்தனைகளை உண்மையான அர்த்தத்தில் முன்னெடுத்துச் செல்லும் ராஜ் தாக்கரேவுக்கு இதை பரிசளிக்க முடிவு செய்தேன். பாலாசாகேப்பின் சித்தாந்தத்தின் வாரிசு ராஜ் தாக்கரே. அயோத்தியில் கட்டப்பட்டிருக்கும் ராமர் கோயில் இடத்திலிருந்து ஒரு செங்கலை நினைவுப் பரிசாக வீட்டிற்கு கொண்டு வர விரும்புகிறேன்," என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;</p>

Source link