U19 WC Final: உலகக்கோப்பையை வெல்லுமா இந்தியா? பிட்ச் ரிப்போர்ட், முக்கிய ப்ளேயர்கள் – முழு விவரம்

இந்தியா – ஆஸ்திரேலியா:

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில்  இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோத இருக்கின்றன. முன்னதாக இந்திய அணி அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியும்,  ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதுவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இந்திய அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது. இது தவிர, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி 8 முறை விளையாடியுள்ளது. அதாவது, இதுவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா 5 முறை சாம்பியன் பட்டத்தையும், 3 முறை இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது. இந்தநிலையில், ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களம் இறங்கவுள்ளது.

IND vs AUS, U19 உலகக் கோப்பை இறுதிப் போட்டி விவரம்:

இடம்: வில்லோமூர் பார்க், பெனோனி , தென்னாப்பிரிக்கா

தேதி மற்றும் நேரம்: பிப்ரவரி 11, 1:30 PM

நேரடி ஒளிபரப்பு: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான U-19 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டியின் நேரடி ஒளிபரப்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் பார்க்கலாம். போட்டியின் நேரடி ஸ்ட்ரீமிங் ஹாட்ஸ்டாரில் கிடைக்கும்.

IND vs AUS U-19 உலகக் கோப்பை ஆடும் லெவன்:

இந்தியா: ஆதர்ஷ் சிங், அர்ஷின் குல்கர்னி, முஷீர் கான், உதய் சஹாரன் (கேப்டன் ), பிரியன்ஷு மோலியா, சச்சின் தாஸ், ஆரவெல்லி அவனிஷ் (WK), முருகன் அபிஷேக், ராஜ் லிம்பானி, நமன் திவாரி, சௌமி பாண்டே

ஆஸ்திரேலியா: ஹாரி டிக்சன், சாம் கான்ஸ்டாஸ், ஹக் வெய்ப்ஜென் (கேப்டனச்), ஹர்ஜாஸ் சிங், ரியான் ஹிக்ஸ் (WK) டாம் கேம்ப்பெல், ஆலிவர் பீக், ராஃப் மேக்மில்லன், டாம் ஸ்ட்ரேக்கர், மஹ்லி பியர்ட்மேன், காலம் விட்லர்

சிறந்த வீரர்கள்:

முஷீர் கான்: இளம் ஆல்-ரவுண்டர் முஷீர் கான் இதுவரையிலான போட்டியில் இந்தியாவுக்காக சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதில் முக்கியப் பங்காற்றியுள்ளார். முஷீர் இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 338 ரன்களை குவித்துள்ளார், மேலும், 4 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

டாம் ஸ்ட்ரேக்கர்: ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் டாம் ஸ்ட்ரேக்கர் அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தியாவுக்கு எதிராக தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்வார் என்று நம்பப்படுகிறது.

சச்சின் தாஸ்: சச்சின் தாஸ் அரையிறுதி போட்டியில் சிறப்பாக விளையாடி 96 ரன்களை குவித்தார். இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 294 ரன்களைக் குவித்துள்ளார், மேலும் இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடுகளம் எப்படி?

பெனோனியில் உள்ள வில்லோமூர் பூங்காவில் உள்ள இந்த ஆடுகளத்தில் விளையாடும் அணிகள் சமீப காலங்களில் குறைந்த ரன்களையே எடுக்கின்றனர். கடந்த 5 போட்டிகளில் இதில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் 180 தான் . வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இந்த ஆடுகளம் இருக்கிறது. அதேபோல், ஆட்டம் ஆரம்பித்த பின்னர் சுழற்பந்து வீச்சாளர்கள் மைதனத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்கும் கொண்ட வர முடியும். அதேபோல், இங்கு டாஸ் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. இதுவரை இந்த மைதானத்தில் நடைபெற்ற 28 ஒரு நாள் போட்டிகளில் 8 போட்டிகளில் மட்டுமே டாஸ் வென்ற அணி வெற்றிவாகை சூடியிருக்கிறது.

வானிலை:

பிப்ரவரி 11, தென்னாப்பிரிக்காவின் பெனோனியில் 40 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று AccuWeather தெரிவித்துள்ளது. தூறல் காரணமாக ஆட்டத்தில் சில இடையூறுகள் ஏற்படும் என ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 69 சதவீத ஈரப்பதத்துடன் 15 டிகிரியாகவும் இருக்கும்.

நேருக்கு நேர்:

இதற்கு முன், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இரண்டு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இரண்டு முறையும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.  2012ல், கேப்டன் உன்முக்த் சந்தின் சதத்தின் உதவியுடன், ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா. 2018 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில், பிருத்வி ஷா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Source link