Karnataka Woman Beats Father In Law 87 With Walking Stick Arrested | Shocking Video: மாமனாரை ஈவு இரக்கமின்றி தாக்கிய மருமகள்! கீழே தள்ளிவிட்டு அடித்த கொடூரம்


Shocking Video: கர்நாடகாவில் மாமனாரை பெண் ஒருவர் ஈவு இரக்கமின்றி தாக்கிய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
மாமனாரை கொடூரமாக தாக்கிய மருமகள்:
கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள குல்சேகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாப சுவர்ணா. இவருக்கு 87 வயதாகிறது. இவரது மருமகள் உமா சங்கரி. மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள்  இரண்டு பேரும் தான் குல்சேகர் பகுதியில்  வசித்து வருகின்றனர். 
இந்த நிலையில், மாமனார் பத்மநாப சுவர்ணாவை, மருமகள் உமா சங்கரி கொடூரமாக அடித்துள்ளார். வாக்கிங் ஸ்டிக் பயன்படுத்தி கொடூரமாக அடித்திருக்கிறார்.  முதியவர் பத்மநாப சுவர்ணா தடுத்த முயற்சித்தபோது, அவரை கீழே தள்ளி கொடுமைப்படுத்தி இருக்கிறார். இது சம்பந்தமான வீடியோவும் இணையத்தில் வெளியாகி  வைரலாகி வருகிறது. 
அந்த வீடியோவில், அறையில் இருந்த மாமனாரை, வாக்கிங் ஸ்டீக் பயன்படுத்தி மருமகள் கொடூரமாக அடிக்கிறார்.  அவரது கால்கள், உடம்பில் வாக்கிங் ஸ்டீக் வைத்து அடித்துள்ளார்.  முதியவர் வாக்கிங் ஸ்டீக்கை வாங்க முயற்சிக்கிறார். அப்போதும் நிறுத்தாமல் தொடர்ந்து மாமனாரை தாக்குகிறார். ஒரு கட்டத்தில், வாக்கிங்க ஸ்டீக்கை வாங்க முயற்சித்த மாமனாரை கீழே  தள்ளி தாக்குகிறார். 
வைரல் வீடியோ:

Mangaluru: CCTV footage of a woman tortured her father-in-law, She is beating him with a stick and then pushes him. After this video went viral, Mangaluru Police has arrested this woman named Umashankari, who works in Karnataka Electricity Board.#Shameful pic.twitter.com/MdzW5rLicF
— Raajeev Chopra (@Raajeev_Chopra) March 11, 2024

இதோடு, அவரை கடுமையான வார்த்தைகளால்  பேசி, மீண்டும் கீழே  தள்ளி விடுகிறார். அப்போது, சோபாவில் விழுந்த அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த காட்சிகள் அனைத்தும் வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவில் பதிவாகி இணையத்தில் வெளியானது. இந்த வீடியோவிற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். 
இதுகுறித்து பாதிக்கப்பட்டவரின் மகள் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த உமா சங்கரியை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட முதியவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க
CAA: கேரளா பாணியில் தமிழ்நாடு அரசு! சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படாது: முதலமைச்சர் ஸ்டாலின்!
Haryana CM: ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா – அமைச்சரவை கூண்டோடு கலைப்பு
 

மேலும் காண

Source link