நிவாரண முகாம்களில் ரூ.14.40 கோடிக்கு உணவு வழங்கிய சென்னை மாநகராட்சி…

சென்னை மாநகராட்சியில் வெள்ள நிவாரண முகாம்களில், ரூ.14.40 கோடி செலவில் உணவு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பெரிய அளவில் சென்னை பாதிக்கப்பட்டது. சென்னையில் 193 இடங்களில் முதல் மாடி அளவிற்கு மழை நீர் தேக்கம் ஏற்பட்டது. பல பகுதிகளில் மழை நீர் வடிய ஐந்து நாட்கள் ஆனது. மழைநீர் தேங்கிய பகுதிகளை நீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மின் பழுது சரி செய்து, குடிநீர் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன, அதற்காக மாநகராட்சியின் 23 ஆயிரம் பணியாளர்கள் 18,000 காவல்துறையினர், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட பணியாளர்கள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்னை மாநகராட்சி வெள்ளம் மற்றும் புயல் பாதிப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இவர்கள் அனைவருக்கும் உணவு மற்றும் தங்கு வசதியும் ஏற்படுத்தி கொடுத்தது. அத்துடன் படகுகள் வாயிலாக மக்களை மீட்டு அவர்களுக்கு உணவு அளிக்கப்பட்டது, குறிப்பாக நிவாரண முகாம்களில் மட்டும் ரூ.14.40 கோடி மதிப்புள்ள 6 லட்ச உணவு பொட்டலங்களை மாநகராட்சி வழங்கியுள்ளது.

இந்த வகையில் சாலை, வாகனம் சேதம் முடித்த பல்வேறு காரணங்கள் மாநகராட்சிக்கு முதல் கட்டமாக ரூ.401.53 கோடி அடுத்த கட்டமாக ரூ.566.88 கோடி என மொத்தம் ரூ.968.39 கோடி ஒதுக்கும்படி சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

மாநில வருவாய் பேரிடர் மேலாண்மை துறை ஆணையருக்கு, சேத விவரங்களை முழு பட்டியலாக அனுப்பி, நிதி உதவியை கோரி உள்ளது. அதன்படி சாலை சேதம், பள்ளி கூடங்கள் சேதம், கால்வாய் சேதம், வாகனங்கள் பழுது, சுரங்கபாதை, மேம்பாலங்கள், மழைநீர் வடிகால், மருத்துவமனை, மாநகராட்சி மயானங்கள், மாநகராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட சீரமைப்பு உள்ளிட்டவைகளை மேற்கோள் காட்டியுள்ளது.