Shivratri 2024 Karur Sri Kashi Vishwanath Temple First time special abhishekam ccasion of Shivratri – TNN


கரூர் பெரிய ஆண்டாங்கோவில் அருள்மிகு காசி விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மாசி மாத சிவராத்திரி முன்னிட்டு முதல் கால சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
 
 

 
சிவராத்திரி முன்னிட்டு பல்வேறு சிவாலயங்களில்  இரவு முதல்  காலை வரை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்ற நிலையில், கரூர் மாவட்டத்தில் ஆண்டாங் கோவில் பகுதியில் உள்ள விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு மூலவர் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி அம்பிகைக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
 

 
அதன் தொடர்ச்சியாக மூலவர் காசி விஸ்வநாதர் மற்றும் அம்பிகைக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து அதை தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் சுவாமிகளுக்கு உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேதியும் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் பெரிய ஆண்டாங் கோவில் காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நடைபெற்ற சிவராத்திரி முதல் கால சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.
மாசி மாத மகா சிவராத்திரி முன்னிட்டு உப்பிடமங்கலம் அருள்தரும் கிளிசேர் மொழி மங்கை உடனுறை அருள்மிகு அடியாருக்கு எளியர் ஆலயத்தில் மூன்றாம் கால சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம்.
 
 

 
சிவராத்திரி முன்னிட்டு பல்வேறு சிவாலயங்களில் இரவு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம், அருள்பாளித்து வரும் அருள்மிகு கிளிசேர் மொழி மங்கை உடனுறை அருள்மிகு அடியாருக்கு எளியர் சிவாலயத்தில் மாசி மாத சிவராத்திரி முன்னிட்டு மூன்றாம் கால சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
 

 
 
அதை தொடர்ந்து சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறினார். பின்னர் சுவாமிக்கு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆன்மீக பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.
 
 
 
 
 

மேலும் காண

Source link