Producer has made accusation against actor kavin he is not coming to set on time


 
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பயணிப்பவர்கள் ஏராளம். ஆனால் அப்படி பயணித்தவர்கள் அனைவரும் ஸ்டார் நட்சத்திரங்காளாக ஜொலிப்பார்களா என்றால் அது சந்தேகம் தான். அந்த வகையில் கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். தனக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் சரியான முறையில் பயன்படுத்தி வெற்றி பெற்றவர்களில் ஒருவரானார் நடிகர் கவின். 
 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஏராளமான திரைப்பட வாய்ப்புகள் கவினுக்கு குவிந்தது. திரில்லர் ஜானரில் வெளியான ‘லிப்ட்’ திரைப்படம் மூலம் ஹீரோவானார். அதை தொடர்ந்து அவர் நடித்த ‘டாடா’ திரைப்படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. ஓடிடியில் வெளியாகியும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் கவின் . 
அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகரும் போது பல நடிகர்களின் அணுகுமுறையே மாறிவிடும். அந்த வகையில் பல பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் கவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என அவர் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கவினை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர் ஒருவர் பிரபல ஊடகம் ஒன்றிடம் பேசுகையில் கவின் பற்றி குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
 
சமீப காலமாக இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் உள்ளிட்டோருடன் சரியான முறையில் இணைந்து பணியாற்றுவது கிடையாது. அதே போல படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வருவதில்லை. அப்படியே வந்தாலும் வேனிட்டி ரூமிலேயே அதிக நேரம் செலவு செய்கிறார். அவரின் இந்த செயல்களால் மற்ற நடிகர்களின் காட்சிகளை படமாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நடிகர் கவின் செட்டில் வந்து சேர்வதற்காக மற்றவர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் அதிக சம்பளத்தை கேட்பதால் பலரும் அவரை நடிக்க வைக்க விருப்பம் காட்டுவதில்லை என கூறப்படுகிறது.  என குற்றம்சாட்டி இருந்தார். கவின் பற்றி தயாரிப்பாளர் பேசியது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 
கொடுக்கப்பட்ட கால்ஷீட்டுக்கு ஏற்ற படி தான் நடிகர்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்கள். அந்த நாளில் திட்டமிட்டபடி காட்சிகள் படமாக்கப்படவில்லை என்றால் புரொடக்ஷன் தரப்பில் பெரிய அளவில் செலவு ஏற்படும். அது அனைத்தையும் தயாரிப்பாளர்கள் தான் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அது மட்டுமின்றி ஷூட்டிங் தாமதப்படுவதால் தொழில் நுட்ப கலைஞர்கள் பலரும் பாதிக்கப்படுவார்கள்.  மேலும் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், ரிலீஸ் தேதி என அனைத்துமே தாமதமாகி தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும். இதனால் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுவது தயாரிப்பாளர்கள் தான். 
முன்னர் நடிகர் சிம்பு சரியான நேரத்துக்கு ஷூட்டிங் வருவதில்லை என குற்றசாட்டுகள் எழுந்தன. பின்னர் அதை அவர் சரி செய்து கொண்டார். தற்போது அவரின் ஸ்டைலில் நடிகர் கவின் இறங்கியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.   

மேலும் காண

Source link