திருவள்ளுவர் தினம்: விழுப்புரத்தில் மாணாக்கருக்கு திருக்குறள் புத்தகத்தை வழங்கிய முன்னாள் அமைச்சர் பொன்முடி

விழுப்புரம்: திருவள்ளுவர் தினத்தினை முன்னிட்டு விழுப்புரத்தில் முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி வள்ளுவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகத்தினை பரிசளித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தின் இரண்டாம் நாள் திருவள்ளுவர் தினமாக  உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. வள்ளுவனின்  பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அவரது சிலைக்கு தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள திருவள்ளுவரின் சிலைக்கு முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உள்ளிட்டோர் திருவள்ளுவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து வள்ளுவரின் பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் பொன்முடி பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள், திருக்குறள் புத்தகங்களை வழங்கி நன்கு கல்வி பயில வேண்டுமென வலியுறுத்தினார். திருவள்ளுவர் தினத்தன்று தமிழக அரசு அனைத்து மதுகடைகளுக்கு விடுமுறை அளித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

திருவள்ளுவர் தினம்:-

நாடு கடந்து வாழும் தமிழர்களால் ஆண்டு தோறும் தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் கொண்டாட்டம் என்பது எப்போதும் ஒரு நாளில் முடிவு அடைவதில்லை. தை 1ம் தேதி பொங்கல் விழாவும், தை 2-ம் தேதி மாட்டுப் பொங்கலாகவும், திருவள்ளுவர் தினமாகவும் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.1333 திருக்குறள்கள் மூலம் வாழ்க்கையின் அனைத்து நெறிகளையும் கற்பித்துச் சென்றவர் திருவள்ளுவர். பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் பலரும் தங்களுடைய உரைகளின்போது இன்றளவும் திருக்குறளை மேற்கொள் காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்படுகிறது

Source link