கும் கும் பாக்கியா என்ற ஹிந்தி தொலைக்காட்சி தொடரின் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை மிருனாள் தாக்கூர்.அந்த தொடர் தமிழில் இருமலர்கள் என்ற பெயரில் ஒளிபரப்பானது. அந்த தொடரின் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மிருனாள்.பிறகு இவர் 2014 ஆம் ஆண்டு வெளியான விட்டி தண்டு என்ற மராட்டிய திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.அதன் பிறகு ஹிந்தி திரையுலகில் நடித்து வந்த இவர், சீதாராமம் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.தற்போது இவர் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து ஃபேமிலி ஸ்டார் படத்தில் நடித்துள்ளார்.இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இவர் தீவிர ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
Published at : 01 Apr 2024 11:05 PM (IST)
பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி
மேலும் காண