Thanga Thirutheer Bhavani Held On Friday At Kanchipuram Kamatshyamman Temple

லஷ்மி,சரஸ்வதி தேவியருடன், வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்க திருத்தேரில் பச்சை நிற பட்டு உடுத்தி,பல்வேறு மலர் மாலைகளுடன் சிறப்பு அலங்காரத்தில்  உற்சவர் காமாட்சியம்பாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தார். பக்தி பரவசத்துடன் கோவில் உட்பிரகாரத்தில் தங்கத் தேரினை வடம் பிடித்து இழுத்து வேண்டி விரும்பி வழிபட்டு சாமி தரிசனம் செய்த பக்தர்கள்.
 
காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலில்  ( kanchipuram kamatchi amman )
 
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உலக பிரசித்திப்பெற்றதும்,மகா சக்தி பீடங்களில் முதன்மையானவற்றில் ஒன்றானதுமான காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வாரந்தோறும் வரும் வெள்ளிக்கிழமை அன்று  தங்க தேர் பவனி வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், வெள்ளிக்கிழமையை ஒட்டி காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலில் தங்க தேர் பவனியானது வெகு விமரிசையாக நடைபெற்றது.
 

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையையொட்டி நடைபெற்ற தங்க திருத்தேர் பவனி

 
சிறப்பு அபிசேஷக ஆராதனைகள்
 
அதையொட்டி மூலவர் காஞ்சி காமாட்சி அம்பாளுக்கு சிறப்பு அபிசேஷக ஆராதனைகள் நடந்தேறிய பிறகு, பச்சை நிற பட்டு உடுத்தி,வண்ண வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் காஞ்சி ஸ்ரீ  காமாட்சி அம்பாள், சரஸ்வதி,லட்சுமி தேவியருடன் கோவிலிருந்து புறப்பட்டு, சன்னதி வீதிகளில் வலம் வந்து, அதன் பின்னர் கோவில் வளாகத்தில் நிலை நிறுத்தப்பட வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்க தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.
 

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையையொட்டி நடைபெற்ற தங்க திருத்தேர் பவனி

 
உட்பிரகாரத்தில் வடம் பிடித்து இழுத்து
 
அதனையடுத்து  தங்க தேரில் எழுந்தருளிய காஞ்சி ஸ்ரீ  காமாட்சியம்பாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டு,அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தங்க தேரை கோவில் உட்பிரகாரத்தில் வடம் பிடித்து இழுத்து சென்று காஞ்சி  காமாட்சி அம்பாளை வேண்டி விரும்பி வழிபட்டு சாமி தரிசனம் செய்து அம்பாளின் பேரருளை பெற்றுச் சென்றனர்.
 

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையையொட்டி நடைபெற்ற தங்க திருத்தேர் பவனி

 
 
சாமி தரிசனம் 
 
மேலும் இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டர பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும்,வெளி மாநில, வெளியூர் பக்தர்களும் என ஏராளமானோர் பங்கேற்று காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்பாளை தங்கள் நெஞ்சம் நிறைய பயபக்தியுடன் தரிசித்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். மேலும் வந்திருந்த அனைவருக்கும் அன்னதானமும், அம்பாளின் அருட்பிரசாதாங்களும்  வழங்கப்பட்டது. வெள்ளிக்கிழமைகளில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் , நடைபெறும் வெள்ளித் தேரோட்டத்தை பார்த்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

Source link