<p>தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கிக்கு தாலி பிரித்து போட பாக்கியம் குடும்பத்துடன் வந்திருக்க, ஷண்முகம் குடும்பம் கோயிலுக்கு வந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.&nbsp;</p>
<p>அதாவது, ஷண்முகம் குடும்பத்தினர் கோயிலுக்கு வருவதைப் பார்த்து இசக்கி சந்தோசப்பட்டு அண்ணனிடம் மன்னிப்பு கேட்க கிளம்ப, பாக்கியம் &ldquo;கொஞ்சம் பொறுமையா இரு&rdquo; என்று தடுத்து நிறுத்துகிறாள். இதனையடுத்து குடும்ப ஜோதிடர் கோயிலுக்கு வர சௌந்தரபாண்டி &ldquo;என்னையா எனக்கு கண்டம் இருக்குனு என்னன்னவோ கொளுத்தி போட்டிருக்க&rdquo; என்று கேட்க, ஐயா அப்படி நான் எதுவும் சொல்லலையே என்று உண்மையை உடைக்க, இது பாக்கியத்தோட திட்டம் என்பது தெரிய வருகிறது.&nbsp;</p>
<p>இதனைத் தொடர்ந்து இதே கோயிலுக்கு ஷண்முகம் குடும்பம் வந்து சாமி கும்பிடுவதைப் பார்த்து விடுகிறார். அதோடு பாக்கியமும் வைகுண்டமும் சந்தித்துக் கொண்டு &ldquo;நான் சொன்ன மாதிரி கூப்பிட்டு வந்துட்டேன், இனிமே இந்த தாலி பிரிச்சி போடுற விஷயம் நல்லபடியா நடக்கணும்&rdquo; என்று பேசிக்கொள்ள சௌந்தரபாண்டி இதையும் கேட்டு விடுகிறார்.&nbsp;</p>
<p>இதனையடுத்து &ldquo;அண்ணன் – தங்கச்சி ரெண்டு பேரும் சேர்ந்து குடும்பத்தை சேர்த்து வைக்க பிளான் போடுறீங்களா? இந்த நிகழ்ச்சியை எப்படி நடத்தறீங்கன்னு பார்க்குறேன்&rdquo; என்று மனதில் நினைத்துக்கொண்டு முத்துப்பாண்டி பாண்டியம்மாவிடம் விஷயத்தை சொல்ல, அவர்களும் கடுப்பாகின்றனர். பிறகு சௌந்தரபாண்டி அடுத்து நாம என்ன செய்யணும் என்பதை ரகசியமாக சொல்கிறார். இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.</p>

Source link


Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed