Dhrishyam Remake: ஹாலிவுட்டில் கலக்கப்போகும் த்ரிஷ்யம்: மோகன்லால், கமல் வரிசையில் நடிக்கப்போவது யார்?

முன்னதாக கொரிய மொழியில் ரீமேக் செய்வதற்கான ஒப்பந்தம் முடிந்த நிலையில் தற்போது ஆங்கிலத்தில் இப்படத்தை ரீமேக் செய்ய இருக்கிறார்கள்.

த்ரிஷ்யம்

கடந்த 2013ஆம் ஆண்டு  மலையாள மொழியில் வெளியான படம் த்ரிஷ்யம். ஜீது ஜோஸஃப் இயக்கி மோகன்லால் மீனா ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்தார்கள். ஒரு சாமானியன் எதிர்பாராத ஒரு நிகழ்வில் இருந்து தனது குடும்பத்தைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளே த்ரிஷ்யம் படத்தின் கதை.

மலையாளத்தின் இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றதனால் கடந்த 2015ஆம் ஆண்டு தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. கமல்ஹாசன், கெளதமி, நிவேதா தாமஸ் ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்தியில் அஜய் தேவ்கன் – ஷ்ரேயா நடிப்பில்  த்ரிஷ்யம் வெளியானது. கிட்டத்தட்ட ஐந்து மொழிகளிலுமே ஜீது ஜோசப் இப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021 ஆம் ஆண்டு த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.

கொரிய ரீமேக்

த்ரிஷ்யம் படத்தின் உரிமத்தை வைகாம் நிறுவனத்தின் உரிமையாளரான குமார் மங்கத் பாதக் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு இந்தப் படத்தை கொரிய மொழியில் ரீமேக் செய்வதற்கான ஒப்பந்தம் நடந்து முடிந்தது. கொரியத் திரைப்பட இயக்குநரான கிம் ஜீ வுன் மற்றும் பாரசைட் திரைப்பட நடிகரான சாங் காங் ஹோ ஆகியவர்களால் தொடங்கப்பட்டுள்ள தயாரிப்பு நிறுவனம் ஆந்தலாஜி ஸ்டுடியோ இந்தப் படத்தை கொரிய மொழியில் ரீமேக் செய்வதற்கான உரிமத்தைப் பெற்றது. கொரிய மொழியில் ரீமேக் ஆகும் முதல் படம் த்ரிஷ்யம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கில மொழியில் ரீமேக்

இப்படியான நிலையில் த்ரிஷ்யம் படம் ஆங்கில மொழியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை கல்ஃப் ஸ்ட்ரீம் என்கிற தயாரிப்பு நிறுவனம் வெளியிட இருக்கிறது.

Source link