Idhayam Serial Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாரதியை தீ வைத்துக் கொளுத்த துரை முயற்சிக்க ரூமுக்குள் சிக்கிய பாரதியை ஆதி காப்பாற்றிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, லதாவும் கேசவுக்கும் ரிசப்ஷன் தொடங்க லதாவின் அப்பா மேடை ஏறி கேசவ் தான் காஞ்சிபுரத்தில் உள்ள கம்பெனியின் எம்.டி என்றெல்லாம் சொல்லி பெருமையாகப் பேச, சாரதாவும் அறிவும் இதை கேட்டு அதிர்ச்சி அடைகின்றனர்.
அறிவு மேடை ஏறி கேசவ் எம்.டி இல்லை என்ற உண்மையையே உடைக்க, லதாவின் அப்பா அம்மா அதை நம்ப மறுக்கின்றனர். “பாரதியை கேளுங்க அவளே உண்மையை சொல்லுவா” என்று சொல்லி இழுத்து விட பாரதி என்ன சொல்வது என்று தெரியாமல் நிற்க மொத்த உண்மையும் உடைந்து கல்யாணமே நின்று போகும் நிலைக்கு செல்கிறது.
இந்த நேரத்தில் அங்கு வரும் ஆதி “காஞ்சிபுரம் கம்பெனியை கேசவ் பெயருக்கு எழுதி வைக்க நான் ரெடி. லதா வேணுமா? கம்பெனி வேணுமா” என்பதை கேசவன் தேர்வு செய்யட்டும் என்று சொல்ல, அவன் “எனக்கு லதா தான் வேண்டும்” என்று பதில் சொல்கிறான். “இது தான் அவனுடைய லவ், உங்க பொண்ணு மேல உயிரையே வச்சிருக்க, இவனையா வேண்டாம்னு சொல்றீங்க” என்று ஆதி எடுத்து சொல்லி லதா அப்பா அம்மாவின் மனசை மாற்றுகிறான்.
இதனையடுத்து பாரதி ஆதியை தனியாக சந்தித்து “நீங்க பெரிய ஆள்” தான் என்று பெருமையாக சொல்ல, “உன்னுடைய இந்த அழகுக்கு முன்னாடி எதுவுமே பெருசு இல்ல” என்று பாரதியின் அழகை புகழ்கிறான். இப்படியான நிலையில் இன்றைய இதயம் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Saranya Ponvannan: ரசிகர்களின் பாசக்கார அம்மா சரண்யா பொன்வண்ணன் கொலை மிரட்டல் விடுத்தாரா? உண்மை என்ன?
Prabhudeva Birthday : நடனத்தின் இலக்கணத்தை மாற்றியமைத்தவர்.. இந்தியாவின் ஜாக்சன் பிரபுதேவாவுக்கு பிறந்தநாள்
மேலும் காண