Chithirai Peruvizha Brahmotsavam at kanchipuram kachabeswarar temple date and time tnn – TNN

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாளான வரும் 22ஆம் தேதி திருத்தேர் வீதி உலாவும், 25 ஆம் தேதி இரவு வெள்ளி ரத வீதி உலா நடைபெறும்
 
 

கோவில் நகரம் காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாநகரம், சிவக்காஞ்சி மற்றும் விஷ்ணு காஞ்சி என இரண்டு பகுதிகளாக  உள்ளது. இந்த காஞ்சி மாநகரில்,  எந்த மூலையில் இருந்தாலும் உங்களால் ஒரு கோவில் கோபுரத்தை பார்த்து விட முடியும். காஞ்சிபுரம் முழுவதும்  கோவில்களால் நிறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக காஞ்சிபுரம் நகரத்திற்கு “கோவில் நகரம் “பெயரும் உள்ளது. நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் கோவில்களை பார்க்க படையெடுத்து வருவது வழக்கமாகி உள்ளது.  காஞ்சிபுரத்தில காஞ்சி காமாட்சி அம்மன் கோவில்,  ஏகாம்பரநாதர் கோவில்,  கைலாசநாதர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், வைகுண்ட ராஜா பெருமாள் கோவில், கச்சபேஸ்வரர் திருக்கோயில் இப்படி பல நூற்றுக்கணக்கான புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன. கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் – கச்சபேஸ்வரர் கோயில் ( kachabeswarar temple  )
 
காஞ்சிபுரத்தில் உள்ள சைவ சமய திருத்தலங்களில் பிரசித்திபெற்றது கச்சபேஸ்வரர் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் இன்று அதிகாலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இரவு 7 மணியளவில் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர், சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.
 
திருத்தேர் வீதி உலா
பிரம்மோற்சவத்தில் தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் சூரியபிரபை, சந்திரபிரபை, பூத வாகனம், திருக்கயிலைக் காட்சி, நாக வாகனம், இடப வாகனம், அதிகார நந்தி சேவை, சப்பரம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகன சேவை நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாளான வரும் வரும் 22ஆம் தேதி திருத்தேர் வீதி உலாவும், 25 ஆம் தேதி இரவு வெள்ளி ரத வீதி உலா நடைபெறவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர், அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

 
 

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில்  தல புராணம்
அமிர்தம் எடுப்பதற்காக,  பாற்கடலை  கடைந்த பொழுது  மத்தாக பயன்படுத்தப்பட்ட மந்திர மலை கடலில், மூழ்கிக் கொண்டிருந்தது.  இதனால் அமிர்தம் கிடைக்காமல் பணி தடைபடும் அபாயம் இருந்தது. இதனால் மகாவிஷ்ணு  ஆமை அவதாரம் எடுத்தார். மந்திர மலையை தாங்கி பிடித்து பணி நிறைவடைய உதவி புரிந்தார். இதனால் திருமாலுக்கு செருக்கு உண்டாகியதாக கூறப்படுகிறது.  உலகம் அழியும் வகையில் இதனால் உலகம் அழியும் வகையில், கடலை கலக்கியதால் சிவபெருமான் கோபம் அடைந்துள்ளார். சிவபெருமான் ஆமை ஓட்டினை,  வென்டக மலையனிடையே  மறைத்து வைத்துள்ளார். அதன் பிறகு,  தனது தவறை  உணர்ந்து. இதனை அடுத்து  திருமால் ஆமை வடிவத்தில்  சிவனை வழிபட்டுள்ளார். 
 
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் பெயர் காரணம்
ஆமை வடிவில் இருந்த சிவன் வழிபட்டதால் இந்த தளத்திற்கு,  கச்சப்ரேஸ்வரர்  என  பெயர் பெற்றது. ( கச்சபம்-ஆமை. கச்சப+ஈசர்=கச்சபேசர் )

Published at : 16 Apr 2024 04:11 PM (IST)

மேலும் காண

Source link