ப்ரோ கபடி லீக்கின் 10வது சீசனில் இன்று அதாவது ஜனவரி 14ஆம் தேதி தமிழ் தலைவாஸ் அணியும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இதில் தமிழ் தலைவாஸ் அணியை ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 36 – 31 புள்ளிகள் என்ற வித்தியாசத்தில் வென்று அசத்தியுள்ளது.
போட்டி தொடங்கியதும் தமிழ் தலைவாஸ் அணி ரெய்டில் ஒரு புள்ளியும் டிஃபெண்டிங்கில் ஒரு புள்ளியும் எடுத்தது. இதனால் தமிழ் தலைவாஸ் அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. அப்போது ஹரியானா அணி ஒரு புள்ளி கூட எடுக்காமல் இருந்தது. இந்த நிலை தொடரும் என எதிர்பார்க்கப்பட்டபோது தமிழ் தலைவாஸ் அணியை ஹரியானா அணி அடித்து துவம்சம் செய்தது. அதன் பின்னர் ஹரியானா அணியின் புள்ளி வேட்டையை தமிழ் தலைவாஸ் அணியால் தடுக்கவே முடியவில்லை. தமிழ் தலைவாஸ் அணியின் ரெய்டர்களும் டிஃபெண்டர்களும் தொடந்து சொதப்பினர். இதனால் ஹரியானா அணிக்கு புள்ளிகள் மளமளவென உயர்ந்தது. போட்டியின் முதல் பாதி முடியும்போது ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 22 புள்ளிகளும் தமிழ் தலைவாஸ் அணி 12 புள்ளிகளும் எடுத்து இருந்தது. முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணியை ஹரியானா அணி ஆல் அவுட் செய்தது.
இரண்டாம் பாதியில் தமிழ் தலைவாஸ் அணியின் டிஃபெண்டர்கள் சிறப்பாக விளையாடி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வீரர்களை வெளியேற்றினர். இதனால் தமிழ் தலைவாஸ் அணி புள்ளி வித்தியாசம் குறைந்தது மட்டும் இல்லாமல் ஹரியானா அணியை ஆல் அவுட்டும் செய்தது.
Final whistle, a difficult defeat. Thalaivas showed grit, and we stand by them in success and challenges. Moving ahead, Thalaiva family.#IdhuNammaTeam | #GiveItAllMachi | #TamilThalaivas | #ProKabaddi | #PKLSeason10 | #HSvCHE pic.twitter.com/SHp2M0dJAm
— Tamil Thalaivas (@tamilthalaivas) January 14, 2024
இறுதி வரை போராடிய தமிழ் தலைவாஸ் அணி டிஃபெண்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது. டிஃபெண்டிங்கில் மட்டும் தமிழ் தலைவாஸ் அணி 12 புள்ளிகள் எடுத்து அசத்தியது. தமிழ் தலைவாஸ் அணி ஒரு முறை ஆல் அவுட் ஆனது. அதேபோல் ஹரியானா அணியை தமிழ் தலைவாஸ் அணி ஒருமுறை ஆல் அவுட் செய்தது. இந்த போட்டியில் அடைந்த தோல்வியால் தமிழ் தலைவாஸ் அணி புள்ளிப்பட்டியலில் 20 புள்ளிகளுடன் 11வது இடத்தில் உள்ளது. இதுமட்டும் இல்லாமல் தமிழ் தலைவாஸ் அணியின் நெகடிவ் புள்ளிகள் அதாவது எதிர்மறைப் புள்ளிகள் 30ஆக உயர்ந்துள்ளது.
தமிழ் தலைவாஸ் அணி தனது அடுத்த போட்டியில் நாளை மறுநாள் அதாவது ஜனவரி 16ஆம் தேதி பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.