தமிழ் சினிமாவில் என்றுமே சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். 70 வயதை தாண்டியும் இன்றும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பம்பரம் போல சுறுசுறுப்பாக செயல்பட்டு வருவதும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தன்னை எப்போதுமே பிஸியாக வைத்துக்கொண்டு இருக்கிறார் ரஜினிகாந்த். தனக்கேற்ற கதாபாத்திரங்களாக தேர்வு செய்து அதில் அதே கெத்துடன் கலக்கி வருகிறார்.
கடந்த ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததுடன் ரஜினிகாந்துக்கு அது ஒரு சிறந்த கம்பேக் படமாக அமைந்தது. ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘லால் சலாம்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
தற்போது ‘ஜெய்பீம்’ புகழ் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்ற அதிரகபூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஜெயிலர் படத்தை போலவே ‘வேட்டையன்’ படத்திலும் நடிகர் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது.
‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தலைவர் 171’ படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். தலைவர் 171 படத்தின் திரைக்கதையை எழுதுவதற்காக லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் படப்பிடிப்பை சில மாதங்கள் ஒத்தி வைத்து இருந்தார். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் தான் தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் வரும் ஏப்ரல் 22ம் தேதி வெளியாக உள்ளது என்ற அறிவிப்பு வெளியானது. என்றுமே படங்களை மாஸாக கொடுக்கும் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினியை இயக்குகிறார் என்றால் அப்படம் நிச்சயம் மாஸாக தான் இருக்கும். படத்தின் டீசரும் தெறிக்க விடும் வகையில் இருக்கும் என்பதால் அதை காண மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
எதிர்பார்ப்பு எகிறி வரும் இந்நிலையில் தலைவர் 171 படம் குறித்த சில தகவல்கள் வெளியை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இப்படத்தின் வில்லனாக நடிப்பதற்காக பாலிவுட் ஸ்டார் ரன்வீர் சிங் அணுகப்பட்டுள்ளார் என்றும் அவரிடம் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்றும் கூறப்படுகிறது.
மேலும் ஒரு புதிய அப்டேட்டாக சிவா, தளபதி உள்ளிட்ட படங்களில் நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த நடிகை ஷோபனா மீண்டும் தலைவர் 171 படத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடியாகிறார் என கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
மேலும் காண