சென்னை மெட்ரோ ரயில்:

சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூரை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது. அதேபோல், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக மறு வழித்தடமும் உள்ளது.

இந்த மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்கான பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது. மேலும், மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜனவரி மாதத்தில் 84.63 லட்சம் பேர் பயணம்:

இந்த நிலையில், 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 84.63 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கு போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 5 லட்சத்து 28 ஆயிரத்து 914 பயணிகள் மெட்ரோ இரயிலில் அதிகமாக பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது, "01.01.2024 முதல் 31.01.2024 வரை 84,63,384 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 12.01.2024 அன்று 3,64,521 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். 2024, ஜனவரி மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 37,43,885 (Online QR 2,21,716; Static QR 2,09,136; Paytm 3,75,357; Whatsapp 3,04,232; PhonePe 97,266), பயண அட்டையை பயன்படுத்தி (Travel Card Ticketing System) 37,92,912, டோக்கன்களை பயன்படுத்தி 15,456 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 8,792 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 9,02,036 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ் அப் டிக்கெட், பேடிஎம் ஆப், போன்பே ஆப் போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்களுக்கும் 20% கட்டணத் தள்ளபடி வழங்குகிறது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம். மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Врач учитывает симптомы, риски, анамнез и семейную ситуацию, чтобы предложить подходящую программу. Изучить вопрос подробнее – https://narkologicheskaya-klinika-krasnodar2.ru/
Closed the tab with a small sense of finality rather than the usual rushed exit, and a stop at mintorchardartisanbazaar…
Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Изучить вопрос подробнее – [url=https://narkologicheskaya-klinika-krasnodar4.ru/]наркологическая клиника лечение…
Центр проводит не только срочный вывод из запоя. Комплексное лечение алкогольной зависимости может включать детокс, медикаментозное восстановление, психотерапию, кодирование, психологическую…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

கர்நாடகா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஸ்கேம்: கேபிஎஸ்சி மோசடி வேட்பாளர்கள் ரிசார்ட்டுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், கேள்வி பதில்: ED | இந்தியா செய்திகள் | ACTPnews.com

ஜார்கண்ட் டிஜிபி நியமன விதிகளை ‘மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என உச்சநீதிமன்றம் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம்: ஜம்மு காஷ்மீர்: ஈரானில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்களுக்கான பாஸ்போர்ட்டை புதுப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு | இந்தியா செய்திகள் | ACTPnews.com

ஜம்மு மற்றும் காஷ்மீர்: ஜம்மு & காஷ்மீர்: பூஞ்ச் எல்லையில் கண்ணிவெடி கண்டெடுக்கப்பட்டது, அழிக்கப்பட்டது | இந்தியா செய்திகள் | ACTPnews.com

இந்திய மாணவர்கள் எங்கள் வளாகத்தில் அசாதாரணமான பங்களிப்பைச் செய்கிறார்கள் என்று அரிசோனா பல்கலைக்கழகத்தின் இந்திய அமெரிக்கத் தலைவர் சுரேஷ் கரிமெல்லா கூறுகிறார் | இந்தியா செய்திகள் | ACTPnews.com
You May Have Missed
You May Have Missed

டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் டிராவிஸ் கெல்ஸ் ஆகியோர் $5.35 மில்லியனுக்கும் அதிகமான ஓஹியோ மாளிகையின் உரிமையாளர்களை ‘ஆப்சென்ட்’ என்று முத்திரை குத்தியுள்ளனர்; அண்டை வீட்டார் கழிவுநீர், வனவிலங்குகள் மற்றும் பாதுகாப்பு அச்சங்களை எழுப்புகின்றனர், அதே நேரத்தில் தம்பதிகளின் குழு அளவிடப்பட்ட வேலி மற்றும் பாதுகாக்கப்பட்ட அணுகலை பாதுகாக்கிறது | ஆங்கில திரைப்பட செய்திகள் | ACTPnews.com

Genuinely good work, the kind that holds up over multiple readings without losing its appeal, and a stop at quartzorchardretailstudio…