DMK Meeting Salem: 2 லட்சம் தொண்டர்களுக்கு தயாராகும் உணவு.. எத்தனை பேர் தயாரிக்கும் பணியில்..? மெனு என்ன?

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் சேலத்தில் இன்று திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு கட்சி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இளைஞரணி மாநாட்டை கனிமொழி எம்.பி கொடியேற்றி தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டிற்காக சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் அருகில் சுமார் 2 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் என்ன..?

திமுக இளைஞரணி மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக காலை 9 மணிக்கு கட்சி கொடி ஏற்றப்படுகிறது. இந்த கட்சி கொடியினை திமுக துணை பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி ஏற்றி வைக்கிறார். அதனை தொடர்ந்து காலை 9.30 மணிக்கு வரவேற்புக்குழு தலைவர் இளைஞரணி துணை செயலாளர் எஸ்.ஜோயல் வரவேற்று பேச இருக்கிறார். தொடர்ந்து, 9.45 மணிக்கு மாநாட்டு தலைவராக உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்யும் நிலையில்,10 மணிக்கு மாநாட்டு ஒருங்கிணைப்பாளரும், கட்சியின் முதன்மை செயலாளருமான அமைச்சர் கே.என். நேரு உரையாற்றுகிறார்.

தொடர்ந்து 10.15 மணிக்கு மொழிப்போர் தியாகிகள் உருவப்படங்கள் திறந்து வைக்கப்பட்டு, மாநாட்டு திறப்பாளர் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. எழிலரசன் உரையாற்றுகிறார்.

இதை தொடர்ந்து மாநாட்டு தலைவரும், திமுக இளைஞரணி செயலாளரும் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை உரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்றே சேலம் சென்று விட்டார். இதை தொடர்ந்து மாநாட்டிற்காக கன்னியாகுமரியில் தொடங்கி மாநாடு நடைபெறும் பகுதியை வந்தடைந்த புல்லட் பேரணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

இன்று நடைபெறும் இந்த இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முழுவதிலிமிருந்து, சுமார் லட்சக்கணக்கான தொண்டர்கள் சேலம் நோக்கி படையெடுத்து வருகின்றன. இந்தநிலையில், இன்று நடைபெறும் இந்த மாநாட்டிற்காக தொண்டர்களுக்கு சிறப்பு உணவுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அவை என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 லட்சம் தொண்டர்களுக்கு தயாராகும் உணவு:

திமுக சார்பில் இன்று சுமார் 2 லட்சம் பேருக்கு உணவுகள் தயார் செய்யும்படி கூறப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு லட்சத்தி 70 ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணியும், மீதமுள்ள 30 ஆயிரம் பேருக்கு வெஜ் பிரியாணியும் தயாராகி வருகிறது.

மட்டன் பிரியாணியுடன் சிக்கன் 65, பிரெட் அல்வா, தயிர்சாதம் வழங்கப்பட இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக வெஜ் சாப்பிடுபவர்களுக்கு வெஜ் பிரியாணியுடன் கோபி 65, பிரெட் அல்வா, தயிர் சாதம் வழங்கப்பட இருக்கிறது. இவை அனைத்தும் விறகு அடுப்பில் சுடச்சுட தயாராகி வருகிறது.

மட்டன் பிரியாணி செய்வதற்காக சுமார் 40, 000 கிலோ மட்டனும், சிக்கன் 65க்காக 2000 கிலோ சிக்கனும் வாங்கப்பட்டுள்ளது.

எத்தனை பேர் உணவு தயாரிக்கும் பணியில்..?

திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியில் சமையல் செய்யும் நபர்கள் மற்றும் சப்ளையர்கள் என மொத்தம் 5000 ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். பிரெட் அல்வா நேற்று இரவே தயாரிக்கப்பட்ட நிலையில், பிரியாணியானது இன்று அதிகாலை 2 மணி முதல் தயாராகி வருகிறது.

கணிக்கப்பட்ட 2 லட்சத்திற்கு மேல் அதிகமான தொண்டர்கள் பங்கேற்கும் வேளையில், கூட்டத்தை பொறுத்து வெஜ் பிரியாணி செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Source link