தமிழ் சினிமாவின் உச்ச பட்ச நட்சத்திரமான நடிகர் விஜய் நடிப்பு மட்டுமின்றி டான்ஸ், ஆக்ஷன், பாடகர், காமெடி, உடல் மொழி, திரை மொழி என அனைத்திலுமே பின்னி பெடெலெடுத்து விடுவார். அவரின் ஒவ்வொரு கதாபாத்திரங்களிலும் தன்னை செதுக்கி கொண்டவர். குட்டி குழந்தைகள் முதல் வயதான தாத்தா பாட்டி வரை அனைவரின் ஃபேவரட் நடிகர் என்றால் அது எந்த ஒரு சந்தேகமும் இன்றி விஜய் தான்.
விஜய் சுபாவம் :
நடிகர் விஜய் எப்படி பட்ட நடிகர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் மிகவும் கூச்சமான சுபாவம் கொண்டவர், அதிக அளவில் பேசமாட்டார் என்பது அவருடன் பணிபுரிந்த பலரும் சொல்லி கேள்விப்பட்டு இருப்போம். அப்படி நடிகர் விஜய்யுடன் திருப்பாச்சி படத்தில் இணைந்து நடித்தவர் நகைச்சுவை நடிகர் பெஞ்சமின். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட பெஞ்சமின் நடிகர் விஜய் செட்டில் எப்படி இருப்பார் என்பது குறித்து பகிர்ந்து இருந்தார்.
பிளாக் ஸ்கிரீன்:
நடிகர் விஜய் ஒரு வித்தியாசமான நடிகர். இயக்குநர் டயலாக் ஷீட் கொடுத்தால் கூட அதை வாங்கி படித்து பார்ப்பார். எந்த எந்த டயலாக் அவர் பேசணும் என கேட்டுக் கொள்வார். அவ்வளவு தான் உடனே டேக் போகலாம் என சொல்லிடுவார். உண்மையிலேயே எல்லாரும் சொல்வது போல செட்டில் அமைதியாக தான் இருப்பார். டயலாக் பேச ரொம்ப கூச்சப்படுவார். கேமரா எதிரே இருக்குன்னா இரண்டு பக்கமும் கருப்பு துணியில் ஸ்கிரீன் போல ஆள் உயரத்துக்கு கட்டிடுவாங்க. கேமரா மேன் மட்டும் தான் எங்க இரண்டு பேரையும் பாக்கணும். பப்ளிக் யாருமே பார்க்க முடியாது. யாராவது தப்பி தவறி எட்டி பார்த்துட்டா அதுவும் அவருக்கு தெரிந்துவிடும். யாரோ எட்டி பாக்குற மாதிரி இருக்கு யாரு அதுன்னு கேட்பார். யாரு முன்னாடி இருந்தாலும் நடிக்க மாட்டார்.
ஆனால் அதுவே டான்ஸ் சீக்வன்ஸ் இருந்தா போதும் எல்லா ஸ்க்ரீனையும் கழட்டிவிட சொல்லிவிடுவார். ஒரே தடவை தான் எப்படி ஸ்டெப்ஸ் போடணும் என பார்ப்பார். உடனே டேக் போகலாம் என சொல்லிவிடுவார். அப்படி ஆடுவார் மனுஷன். எப்படி தான் அவருக்கு டான்ஸ் அப்படி வரும்னு தெரியல. உண்மையிலேயே டான்ஸ், ஃபைட் சீக்வன்ஸ் வந்துதுன்னா போதும் பின்னி எடுத்துடுவார் விஜய்.
அசத்தலான டான்ஸர் :
மிகவும் இயல்பாக நடிக்கும் விஜய் டான்ஸையும் அதை விட இயல்பாக கொஞ்சமும் சிரமமின்றி அசால்ட்டாக ஆகிவிடுவார். அவர் டான்ஸ் ஸ்டைல் பார்த்து ரசிகர்கள் மட்டுமின்றி பல நடன இயக்குநர்களே அசந்துள்ளனர். அதே போல அவரின் ஃபைட் சீக்வன்ஸ் கூட அதிரடியாக மாஸ் தெறிக்கும் படி அமைந்து இருக்கும். அது அவருக்கே உரித்தான ஸ்பெஷாலிட்டி.
மேலும் காண