IND Vs ENG 5th Test Devdutt Padikkal Scored Half Century On His Test Debut Sarfaraz Khan

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி  குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ. சர்வதேச மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை  வென்றது. அந்த வகையில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தனது சொந்த நாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றுள்ளது. இதனிடையே இந்த டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று தொடங்கியது.
அறிமுக டெஸ்ட்…அரைசதம் விளாசிய தேவ்தத் படிக்கல்:

A TEST FIFTY ON DEBUT BY DEVDUTT PADIKKAL…!!! 🔥A quality innings by Padikkal – he’s showcasing his class in the very first innings. pic.twitter.com/phFBcTbUSD
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 8, 2024

இதில் முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் எடுத்தது. பின்னர் இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்களும், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 103 ரன்களும், சுப்மன் கில் 110 ரன்களும் குவித்தனர். அதனபடி இந்திய அணியின் ரன் மளமளவென உயர்ந்தது.
படிக்கல், சர்பராஸ் கான் அபாரம்:
பின்னர் தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியில் களம் இறங்கினார் இந்திய அணியின் இளம் வீரர் தேவ்தத் படிக்கல். அவருடன் ஜோடி சேர்ந்தார் சர்பராஸ் கான். இருவரும் ஜோடி சேர்ந்து இந்திய அணிக்கு ரன்களை பெற்றுத்தந்தனர். அதன்படி தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சிக்ஸர் பறக்க விட்டு அரைசதம் அடித்து அசத்தினார் தேவ்தத் படிக்கல்.
மொத்தம் 103 பந்துகள் களத்தில் நின்ற அவர் 10 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 65 ரன்களை குவித்தார். அதேபோல், மறுபுறம் தன்னுடைய அரைசதத்தை பதிவு செய்தார் சர்பராஸ் கான். 60 பந்துகள் களத்தில் நின்ற அவர் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 8 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸரை விளாசினார். அதன்படி, 56 ரன்களை குவித்தார். இளம் வீரர்கள் இருவரும் அரைசதம் விளாசியது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா – நடந்தது இதுதான்!
 
 

Source link