top news India today abp nadu morning top India news February 2 2024 know full details



 மீண்டும் அல்வா கிண்டியுள்ளார்கள்! மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து அமைச்சர் உதயநிதி!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளதால் முழு நிதிநிலை அறிக்கைக்கு பதில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது குறித்து இந்தியா முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், ”ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மீண்டும் தமிழ்நாட்டை பாசிஸ்ட்டுகள் புறக்கணித்திருக்கிறார்கள். மேலும் படிக்க..

ஜார்க்கண்டில் கூவத்தூர் ஃபார்முலா! ஹைதரபாத் அழைத்துச் செல்லப்பட்ட ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள்!

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சம்பாய் சோரன் இன்று அதாவது பிப்ரவரி 1ஆம் தேதி, அடுத்த ஆட்சி அமைக்க தன்னை அழைக்குமாறு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிடம் வலியுறுத்தியுள்ளார்.  பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நேற்று மாலை அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதில் இருந்து முதலமைச்சர் இல்லாத நிலையில் மாநிலத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் பேசியுள்ளார் சம்பாய் சோரன். ஆளும் ஜேஎம்எம்-காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த 5 எம்எல்ஏக்களுடன் ராஞ்சியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ராதாகிருஷ்ணனை சம்பாய் சோரன் சந்தித்து முதலமைச்சராக பொறுப்பேற்க அழைப்பு விடுக்குமாறு கோரியுள்ளார். மேலும் படிக்க..

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை கொண்டாடும் நிதிஷ்குமார் – இத்தனை நல்ல விஷயங்களா?

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நேர்மறையானது என, பீகார் முதலமைச்ச்ர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். பாஜகவை வீட்டிற்கு அனுப்புவோம் என்ற முழக்கத்துடன், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைந்து I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியவர்களில் நிதிஷ்குமாருக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால், யாருமே எதிர்பாராத விதமாக கடந்த வாரம், ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்துக் கொண்டார். மேலும், பரம எதிரி என கூறிய பாஜக உடனே சேர்ந்து, மீண்டும் ஆட்சி அமைத்து முதலமைச்சரானார். இது தேசிய அரசியலில் பெடும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் தான், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நேர்மறையானது என, நிதிஷ்குமார் பாராட்டியுள்ளார். மேலும் படிக்க..

”கோவிலை தோண்டினால் அது தான் இருக்கும்” அயோத்தி ராமர் கோவிலை சீண்டிய பிரகாஷ் ராஜ்!

மசூதியை தோண்டினால் கோவில்கள் தெரியும் என்றால், கோவில்களை தோண்டினால் புத்தர் சிலைகள் தான் தெரியும் என நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது. தமிழ் சினிமா மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் பிரகாஷ் ராஜ். வில்லத்தனம், குணச்சித்திர ரோல், அப்பா, நண்பன் உள்ளிட்ட பல கேரக்டர்களில் நடித்த பிரகாஷ் ராஜ், நடிப்பில் பாராட்டப்படுபவர். படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல், அரசியல் கருத்துகளை வெளிப்படையாக கூறுவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் படிக்க..


இந்தியர்களுக்கு ஷாக் கொடுத்த அமெரிக்கா! எச்-1பி விசா பெற நினைப்பவர்களுக்கு ஆப்பு!

இந்தியர்களிடையே மிகவும் பிரபலமான H-1B, L-1 மற்றும் EB-5 போன்ற பல்வேறு வகையான விசாக்களுக்கான பதிவு கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் வேலை செய்ய மட்டும் அனுமதி வழங்கும் விதமாக, கடந்த 2004ம் ஆண்டு முதல் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு எச்-1பி வகை விசாக்களை அந்த நாடு வழங்கி வருகிறது.  அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களுக்கு பிரத்யேக திறமை தேவைப்படும் ஒருசில பதவிகளில் பணியில் அமர்த்தி கொள்ள, இந்தியா உள்ளிட்ட  வெளிநாட்டு பணியாளர்களை பணியமர்த்திக் கொள்ள அமெரிக்கா வழங்கும் ஒரு குறுகிய கால அனுமதி தான் எச்1பி விசா. மேலும் படிக்க..

 

மேலும் காண

Source link