vijay antony in romeo movie press meet about vijay political entry cash for vote


நடிகர் விஜய் ஆண்டனி (Vijay Antony), மிருணாளினி ரவி இணைந்து நடித்துள்ள ரோமியோ திரைப்படம் வரும் ஏப்.11ஆம் தேதி வெளியாக உள்ளது. நடிகர்கள் யோகிபாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரம்ஜான் பண்டிகை ரிலீசாக இப்படம் வெளியாக உள்ளது. பரத் தனசேகர் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், விநாயக் வைத்தியநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
‘விஜய் மக்களுக்கு ஏதாவது செய்ய நினைக்கிறார்’
இப்படத்தின் இறுதிக்கட்ட ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ள நிலையில், முன்னதாக படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது நடிகர் விஜய் ஆண்டனியிடம் நடிகர் விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்வது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த விஜய் ஆண்டனி, “விஜய் 17 வயதில் இருந்தே சினிமாவில் உள்ளார். அதில் உச்சம் தொட்டுவிட்டார். ஒரே வேலையில் இருக்கிறார் என்பதால் நமக்கு அன்ப கொடுத்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என அவருக்குத் தோன்றி இருக்கும். அதனால் அவர் சினிமாவை விட்டு போகிறார்னு நினைக்கிறேன். மக்களுக்கு ஏதாவது செய்யணும் என விஜய் நினைக்கிறார். செய்யட்டும் பார்க்கலாம். ” எனப் பேசியுள்ளார்.
‘வாய்ப்பு கிடைத்தால் அரசியல்’
தொடர்ந்து விஜய் ஆண்டனியிடம் “நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?” எனக் கேள்வி எழுப்பப்பட்டபோது நீங்களும் வரலாம், யார் வேண்டுமானாலும் வரலாம். இப்போதைக்கு நடிப்பில் தான் கவனம். வருங்காலத்தில் சினிமாவில் நிறைய செய்துவிட்டோம், மக்களுக்கு ஏதாவது செய்யலாமே என நினைக்கும்போது எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், ஒருவேளை வரலாம்” எனப் பேசியுள்ளார். 
மேலும் “விஜய்யின் அரசியல் வருகைக்கு நீங்கள் ஆதரவு தருவீர்களா?” எனக் கேள்வி எழுப்பப்பட்ட போது “நான் திருமாளவன் சார், ஸ்டாலின் சார், விஜய் என அனைவருக்கும் ஆதரவு தருகிறேன், நீங்களும் வரலாம்” என பதிலளித்தார்.
‘கஷ்டப்பட்டா வாங்கிக்கோங்க ஆனா..’
தொடர்ந்து ஓட்டுக்கு பணம் தருவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது அதற்கு பதில் அளித்த விஜய் ஆண்டனி, “அதைத் தவிர்க்கணும் தான். ஆனால் ஒருவேளை அடுத்த உணவுக்கு வழி இல்லை, பசங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியவில்லை என்றால் பணம் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் பணம் கொடுத்தவருக்கு ஓட்டு போட வேண்டும் என நினைக்காதீர்கள்.
நல்லவருக்கு ஓட்டு போடுங்கள். உங்கள் பணத்தை திரும்பிக் கொடுக்கிறார்கள். வாங்கிக் கொண்டு சரியான நபருக்கு ஓட்டு போடுங்கள். ஆனால் அதற்கு நேர்மையாக இருக்கத் தேவையில்லை.  கஷ்டப்படும் குடும்பங்கள் வாங்கிக்கோங்க. அது உங்கள் பணம் தான். ஆனால் வாங்கிவிட்டு சரியான நபருக்கு மனசாட்சிப்படி வாக்களியுங்கள்” எனப் பேசியுள்ளார்.

மேலும் காண

Source link