உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் ராஜினாமா? பாஜகவில் இணைகிறாரா ?


கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகவுள்ள அபிஜித் கங்கோபாத்யாய், தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.
தற்போது கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவுள்ள அபிஜித் கங்கோபாத்யாய், ஏபிபி ஆனந்தாவுக்கு பிரத்யேக நேர்காணல் அளித்தார்.
அப்போது தெரிவித்ததாவது, தனது நீதிபதி பதவியை வரும் 5 ஆம் தேதி ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.நீதிபதி கங்கோபாத்யாய், மேற்கு வங்கத்தில் உள்ள ஏபிபி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், மேற்கு வங்கத்தில் எனக்கு மிகவும் சவாலாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு நன்றி, அவர்களால்தான் எனது அரசியல் பயணம் தொடங்குகிறது. அந்த பயணமானது, வரும் செவ்வாய்க்கிழமை ( மார்ச் – 5 ) தொடங்குகிறது.
அரசியல் குறித்து தெரிவிக்கையில்,வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், பாரதிய ஜனதா கட்சி (BJP), இந்திய தேசிய காங்கிரஸ் (INC) அல்லது கம்யூனிஸ்ட் கட்சியில் சேரத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து காங்கிரஸ் தரப்பில் தெரிவித்ததாவது, நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் தங்களது கட்சியில் சேர விரும்பினால், நிச்சயம் வரவேற்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நீதிபதி கங்கோபாத்யாய் வரும் ஆகஸ்ட் மாதத்துடன் பணிக்காலம் நிறைவடைந்து ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
இதுகுறித்து அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கையில், மேற்குவங்க மாநில டிஎம்சி அரசாங்கத்துடன் நீதிபதிக்கு முரண்பாடு இருந்து வந்ததாகவும்,  பாஜக கட்சியில்தான் இணைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது எனவும் தெரிவிக்கின்றனர். 

மேலும் காண

Source link