Education Loan: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நாளை மாணவர்களுக்கு சிறப்பு கல்வி கடன் முகாம்

கல்விக்கடன் பெற மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்பு

மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த கல்லூரி பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் (GDP HALL) (15.02.2024) வியாழக்கிழமை அன்று காலை 10 மணி முதல் 4 மணி வரை நடைபெறவுள்ளது. எனவே கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல் மற்றும் கீழ்கண்ட ஆவணங்களுடன் கலந்து கொள்ள அறிவுறுத்தபடுகிறார்கள். முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து கடன் ஆணை வழங்கப்படும்.

தேவைப்படும் ஆவணங்கள்:

விண்ணப்ப நகல் மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரின் இரண்டு புதிய புகைப்படம் வங்கி Joint account பாஸ்புத்தக நகல், இருப்பிட சான்று நகல்,  வருமான சான்று நகல், ஜாதி சான்று, பான் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்லூரியிலிருந்து பெறப்பட்ட Bonafide சான்றிதழ் மற்றும்

கல்விக்கட்டண விவரம்

பத்து, பனிரெண்டாம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள். முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Source link