How did Balaji name turned into Daniel Balaji


தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான வில்லனாக வலம் வந்தவர் நடிகர் டேனியல் பாலாஜி. மறைந்த நடிகர் முரளியின் உடன் பிறவா சகோதரர் ஆவார். ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு கதாபாத்திரங்களாக தேர்வு செய்து அதை தனித்துமான மேனரிஸதோடு நடித்து அந்த கதாபாத்திரத்துக்கு வலு சேர்ப்பார்.
அதற்காகவே அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவருக்கு வயது 48. 
 

சின்னத்திரை டூ வெள்ளித்திரை:
சித்தி, அலைகள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த டேனியல் பாலாஜி ‘ஏப்ரல் மாதத்தில்’ திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து காக்க காக்க, பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்து பிரபலத்தின் உச்சம் சென்றார்.  
ராதிகாவின் சித்தி சீரியலில் டேனியல் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால் அதுவே அவரின் அடையாளமாகவே மாறி டேனியல் பாலாஜி என பிரபலமானார். 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட்டான சித்தி சீரியலில் ‘டேனியல்’ என்ற பெயரில் வில்லனாக  அறிமுகமானார். கலைந்த நீண்ட தலைமுடியுடன் எப்போதும் கண்ணில் மிரட்டலான கோபத்துடன்  வெறித்தனத்துடன் நடித்திருந்தார். அனைவரும் அவரை டேனி என்றே அழைத்தனர். அந்த சீரியலுக்கு பிறகு அவர் பல படங்களில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் பேசப்பட்டாலும் சித்தி சீரியலில் அவர் நடித்த ‘டேனியல்’ பெயர் தான் கடைசி வரை அவருடன் ஒட்டிக்கொண்டது. 
 

 
டேனியல் பாலாஜி பெயர்:
இந்த பெயர் காரணம் குறித்து அவர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்து இருந்தார். அனைவரும் என்னை டேனி டேனி என அழைத்ததால் நானும் அவர்களுக்கு ரெஸ்பாண்ட் செய்ய ஆரம்பித்தேன். பின்னர் ஒரு முறை ஒரு ப்ராஜெக்டில் நான் நடித்த போது என்னுடைய பெயரை போடவே இல்லையே என என்னுடைய நண்பர்கள் அனைவரும் என்னிடம் கேட்டார்கள். அப்போது நான் புரொடக்ஷன் மேனேஜரிடம் சென்று கேட்டதற்கு உங்கள் பெயர் போட்டு இருக்கே. உங்களுக்கு என தனி டி.ஆர்.பி ரேட்டிங் இருப்பது உங்களுக்கு தெரியுமா? அப்படி இருக்கும்போது எப்படி உங்களுடைய பெயரை போடாமல் இருப்போம் என சொல்லி வீடியோவை காட்டினார்.
அதில் டேனியல் பாலாஜி என வந்தது. அது என்னுடைய பெயரையே இல்லையே யாரு இப்படி சொன்னது என கேட்டேன். அப்படியா உங்களை அனைவரும் டேனி என அழைக்கிறார்கள், நீங்கள் கையெழுத்து போடும்போது பாலாஜி என போடுறீர்கள். அதனால் உங்களுடைய பெயர் டேனியல் பாலாஜி என நினைத்தேன். இது நன்றாக தானே இருக்கு. நீங்க அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்ததால் தான் உங்களை அனைவரும் அப்படி அழைக்கிறார்கள். அது அப்படியே இருக்கட்டும் என புரொடக்ஷன் மேனேஜர் கூறியுள்ளார். இப்படித்தான் பாலாஜி, டேனியல் பாலாஜியாக மாறினார்.  

மேலும் காண

Source link