ULI OVIYANGAL: பிரதமர் மோடிக்கு “உளி ஓவியங்கள்” புத்தகம் பரிசாக வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்.. என்ன ஸ்பெஷல்?

தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய புத்தகம் பற்றி இணையத்தில் பலரும் தேடி வருகின்றனர்.

3 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளார். நேற்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர்  விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த அவர், வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கிண்டி ஆளுநர் மாளிகையில் முக்கிய பிரமுகர்களையும் சந்தித்தார்.

இதனையடுத்து இன்று காலை விமானம் மூலம் திருச்சி சென்ற பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் கோயிலுக்கு பிரதமர் மோடி செல்லவுள்ளார். இதனிடையே நேற்று தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை பொன்னாடை போர்த்தி வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவருக்கு “உளி ஓவியங்கள்” என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார்.

’கேலோ இந்தியா 2023′ விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்க சென்னை வந்த மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் க.கு.ர.மு ரத்தின பாஸ்கர் அவர்களின் ‘உளி ஓவியங்கள்’ நூலை வழங்கி வரவேற்றார்.#KheloIndiaYouthGames2023 pic.twitter.com/rbDPMy811n

— CMOTamilNadu (@CMOTamilnadu) January 19, 2024

இதனைத் தொடர்ந்து இணையத்தில் அந்த புத்தகம் தொடர்பான தேடல்கள் அதிகரித்துள்ளது. இந்த புத்தகமானது மதுரையின் கலைப்பெருமைகளில் ஒன்றாக விளங்கும் மன்னர் திருமலை நாயக்கர் நமக்குத்தந்த கலைப் பெட்டகமான, புதுமண்டபத்தின் ஒற்றைக்கல் சிற்ப அற்புதங்களை பற்றியது. அந்த அற்புதங்களை  கோட்டு ஓவியங்களாக்கி  அதன் பெருமைகளை மீண்டும் உலகறியச் செய்வதில் உளி ஓவியங்கள் பங்கு அதிகம்.  ஆங்கிலத்தில் இந்த புத்தகம் Monoliths of Madurai PuduMandapam Line Art Illustrations என்னும் தலைப்பில் வெளிவந்துள்ளது.

மேலும் உளி ஓவியங்கள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள புதுமண்டபச் சிற்பங்களின் ஓவிய சிற்பங்களை அழகான கோட்டோவியங்களாக எட்டாண்டு கால உழைப்பில் ரத்தின பாஸ்கர் வரைந்திருக்கிறார். மேலும் அந்தச் சிற்பங்களைப் பற்றிய குறிப்புகளும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:

Source link