சீதையாக மின்னும் சாய் பல்லவி, ராமர் வேடத்தில் ரன்பீர் கபூர்: வைரலாகும் புகைப்படங்கள்!
தங்கல் படத்தினை இயக்கிய நித்தீஷ் திவார் இயக்கும் ராமாயண் படம் பற்றிய அதிகாரப்பூர்வத் தகவலை படக்குழு இதுவரை பகிராத நிலையில், படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் தகவல் பகிர்ந்து வந்தன. சாய் பல்லவி சீதாவாக நடிக்க, ரன்பீர் கபூர் இப்படத்தில் ராமர் வேடம் பூண்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இத்தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் இன்று சாய் பல்லவி மற்றும் ரன்பீரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளன.
நம்பிக்கை நட்சத்திரமாக கவின்.. பக்கபலமாக யுவன் இசை.. ஸ்டார் பட ட்ரெய்லர் வெளியீடு!
நடிகர் கவின் இயக்குநர் இளனுடன் கைகோர்த்துள்ள ஸ்டார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. லால், கீதா கோவிந்தம் ஆகியோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, நாயகிகளாக அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். சிறுவயது நடிகனாகும் கனவுடன் வளரும் இளைஞரின் போராட்ட வாழ்க்கையை மையப்படுத்தி அமைந்துள்ள இந்த ட்ரெய்லர் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனமீர்த்துள்ளது.
அரண்மனை 4க்காக கயிற்றில் தொங்கியபடி ஸ்டண்ட்.. தமன்னா எடுத்த ரிஸ்க்.. வீடியோ உள்ளே!
சுந்தர். சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர் படமான அரண்மனை 4 வரும் மே 3ஆம் தேதி ரிலீசாக உள்ளது. தமன்னா இப்படத்தில் பேயாக நடித்துள்ள நிலையில், கோடை விடுமுறையில் குழந்தைகள் கொண்டாடும் படமாக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அரண்மனை 4 படத்துக்காக தான் ரிஸ்க் எடுத்த காட்சியினைப் பற்றி தமன்னா நெகிழ்ச்சியுடன் தன் இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தி கோட் இரண்டாவது பாடல் ரிலீஸ்.. வெங்கட் பிரபு தந்த அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் – வெங்கட் பிரபு முதன்முறையாக கூட்டணி வைத்துள்ள தி கோட் படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதனால் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. அதன்படி முன்னதாக யுவன் இசையில், விஜய் குரலில் அமைந்த தி கோட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ஹிட் அடித்தது. இந்நிலையில் தி கோட் படத்தின் இரண்டாவது பாடல் பற்றிய அப்டேட்டினை தன் ரசிகருடன் உரையாடும்போது வெங்கட் பிரபு இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
திரையரங்கில் சர்ச்சையை ஏற்படுத்திய ஹாட்ஸ்பாட்! ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் திரையரங்குகளில் கடந்த மார்ச் 29ஆம் தேதி வெளியாகி கவனமீர்த்த ஹாட்ஸ்பாட் திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கெளரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், கலையரசன், சாண்டி மாஸ்டர், ஜனனி ஐயர், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் வரும் மே மாதம் 3 ஆம் தேதி, டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண