actor mansoor alikhan condemn av raju support trisha


அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ, ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டிருந்தபோது நடந்த விவகாரங்கள் என நடிகை திரிஷா, கருணாஸ் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார். அவரது கருத்து தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.
ஈனத்தனம், அருவருப்பு:
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் இதுதொடர்பாக ஆடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, இதுபோன்ற ஈனத்தனமான, கேவலமான, அருவருக்கத்தக்க வகையிலே என் திரைத்துறையில் உள்ள சக நடிகைகளை, பெண் குடும்பத்தினரை, சகோதரியினரை எனது துறையில் உள்ளவர்களை யார் குறை கூறினாலும் எங்களையும் சாரும். ஆண் வர்க்கத்தினருக்கும் பங்குண்டு.
அருவருக்கத்தக்க வகையில் பேசிய அந்த நபர் மிகவும் வருத்தப்பட வேண்டும். அவர் தவறு செய்திருக்கிறார். இந்த மாநிலத்திலே திரைத்துறையும், அரசும், அரசியல்வாதிகளும் ஒருவருடன் ஒருவர் இணக்கமாக உள்ளனர். சமத்துவம் படைத்த இந்த தமிழகத்தில் மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்திருப்பதை நான் கேள்விபட்டேன். அது வன்மையாக, கடுமையாக கண்டிக்க வேண்டிய செயலாக கருதுகிறேன்.
நடவடிக்கை எடுக்க தேவை:
அது யார் செய்திருந்தாலும் எனக்கு முகம் தெரியாது. இதுபோன்ற ஈனத்தனமான செயல்களில் அவர் ஈடுபட்டிருக்கக்கூடாது. சுயலாபத்துடன் எதற்காக செய்கிறார் என்று தெரியவில்லை. போகிற போக்கில் சக திரை நாயகிகளை கேவலமான வகையில் பேசியிருப்பது எனக்கு மிகவும் மனதை நோகச் செய்கிறது. தன்மானம் மிக்க மானத்துடன் கௌரவத்துடன் நாங்கள் நடிகைகளை நடத்திக் கொண்டிருக்கும்போது, இதுபோன்ற பேச்சுக்கள் மிகவும் ஆபத்தானவை. அருவருக்கத்தக்கவை. சமுதாயத்தை பாதிக்கும். உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, லியோ படத்தில் திரிஷாவுடன் இணைந்து நடித்த நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா பற்றி பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் வழக்குப்பதிவு என பூதாகாரம் எடுத்ததையடுத்து, மன்சூர் அலிகான் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். இந்த நிலையில், மன்சூர் அலிகான் நடிகை திரிஷா பற்றிய அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகியின் கருத்துக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
மேலும் படிக்க: Trisha: அருவருப்பாக உள்ளது! அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி மீது சட்ட நடவடிக்கை – நடிகை திரிஷா அறிவிப்பு
மேலும் படிக்க: நீதிமன்றத்தில் வேலை செய்யும் பெண்ணின் மகன் நீதிபதியாக தேர்வு – பழனியில் நெகிழ்ச்சி

மேலும் காண

Source link