Cook With Comali Season 5 Contestants: பிரபல தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ப்ளூஸ்டார் பட நடிகை திவ்யா துரைசாமி, உணவு ரிவியூ செய்யும் யூ டியூபர் இர்ஃபான் ஆகியோர் போட்டியாளர்களாக பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
விஜய் டி-வில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி.  வெளியாக நான்கு சீசன்களும் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பாலா, சிவாங்கி, புகழ், மணிமேகலை, சுனிதா, தங்கதுரை  உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தனர். இந்நிலையில், குக் வித் கோமாளி சீசன் – 5 விரைவில் தொடங்க உள்ளது.  சமீபத்தில் குக் வித் கோமாளியின் 5வது சீசனுக்கான அறிமுக ப்ரோமோ வெளியானது.   செஃப் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ் இருவரும் இடம்பெறும் வீடியோ இருந்தது. இந்த சீசனில் வெங்கடேஷ் பட் இல்லை.  இந்த நிகழ்ச்சி தொடர்பான அப்டேட்களுக்காக ரசிர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், கோமாளிகளுடன் சமையல் கலைஞர்களாக பங்கேற்கும் நபர்கள் யார் என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிக் பாஸ் புகழ் தினேஷ், பூர்ணிமா ரவி, கிருஷ்ணா மெக்கன்சி பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாவது சீசனில் நடிக்கும் வசந்த், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த தேவா, விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். 
இதோடு, உலகம் முழுவதும் சென்று அந்தத ஊர்களில் கிடைக்கும் புகழ்பெற்ற உணவுகள் பற்றி ரிவியூ செய்து வீடியோ வெளியிடும் யூ டியூபர் இர்ஃபான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த லிஸ்டில் ப்ளூஸ்டார் படத்தில் திவ்யா துரைசாமியும் இருகிறார்கள் என்று நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

மேலும் காண

Source link


You May Have Missed

You May Have Missed

You May Have Missed